மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
கன்னியாகுமரி : மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை மீனவ அமைப்புகள் கோரிக்கை
தமிழகத்தின் கிழக்கு ஆழ் கடல் பகுதிகளில் மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு மீன் பிடி தடைகாலம் தொடங்கியது - மீன்பிடி தடை கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை மீனவ அமைப்புகள் கோரிக்கை.
தமிழகத்தின் கிழக்கு ஆழ் கடல் பகுதிகளில் மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடி தடைகாலம் தொடங்கியது - மீன்பிடி தடை கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை மீனவ அமைப்புகள் கோரிக்கை.
தமிழகத்தின் கிழக்கு ஆழ் கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி மீன்களின் இனபெருக்க காலம் என வரையறுக்கபட்ட 61 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைகாலம் கடைபிடிக்கபட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மீன் பிடி தடை காலம் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 400 விசைப்படகுகளையும் மீனவர்கள் கரை ஒதுக்கினார்கள்.
மீன் பிடி தடைகாலத்தை முன்னிட்டு துறைமுகத்தில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்தில் இருந்து விசைப்படகுகளுக்கு மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் அனுமதி சீட்டும் நிறுத்தபட்டது. இன்று முதல் தடைகாலம் தொடங்கபட்டு உள்ளதால் மீனவர்கள் தங்கள் படகுகள், மீன் பிடி வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை பழுது பார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் மீன்பிடி தடை கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழகத் தில் கிழக்கு கடற்கரையில் கடந்த 14-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலும், மேற்கு கடற்கரையில் ஜூன் 15-ந் தேதி முதல் ஆகஸ்ட் 14-ந் தேதி வரையி லும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமுல் படுத்தப் பட்டு விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது.இதற்கான இடைக்கால நிவாரணமாக மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.5 ஆயிரம் போதுமானது அல்ல. ஏற்கனவே 45 நாட்கள் என்றிருந்த நிலையில் 2017-ம் ஆண்டு முதல் 61 நாட்களாக அறிவிக்கப்பட்டு அமல் படுத்தப்பட்டு வருகிறது.
இக்காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவ தோடு படகுகள் மற்றும் எஞ்ஜின், வலைகளை ரிப்பேர் செய்வதற்கான செலவு களும் அதிகரித்து உள்ளன. வருமானம் இல் லாத நிலையில் மீனவ குடும் பங்கள் பசி பட்டினி யால் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே நிவாரண தொகையை ரூ.5 ஆயிரத் து-க்கு பதிலாக ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மீனவர்கள் வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனர்.
தமிழக அரசு தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பதை இந்த ஆண்டே அறிவித்து உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் மீன்பிடி தடைக்கால நிவா ரணமாக ரூ.15 ஆயிரம் என்பதை வரும் ஆண்டிலிருந்து அமுல்படுத்த வேண்டுமென தமிழக முதல்வரையும்,மீன்வளத்துறை அமைச் சரையும், மீன்வளத்துறை இயக்குனரையும் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion