மேலும் அறிய
Advertisement
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு இயந்திர தொழிற்கூடம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் விசைப்படகு இயந்திர தொழிற்கூடம் அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் விசைப்படகு இயந்திர தொழிற்கூடம் அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு. 100 க்கு மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் சின்னமுட்டம் ஊர்மக்கள் கன்னியாகுமரி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 350க்கும் மேதலைவர் விசை படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக வளாகத்தில் ஒரு பகுதியில் இயந்திர பழுது நீக்கும்தொழிற் கூடம் அமைக்க 20 சென்ட் நிலத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு அந்த இடத்தில் அதற்கான முதல்கட்ட பணி தொடங்கியது.
இந்நிலையில் தொழிற்கூடம் அமைப்பதற்கு அந்த பகுதியில் உள்ள மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மீன்வளதமடிவு உதவி இயக்குநர் அலுவலகத்தை ஏராளமான பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன் , இதனால் இப்பகுதியில்
பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் சுமார் 75 ஏக்கருக்கு மேல் உள்ள பகுதியாகும் இங்கு சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொழில் செய்து வருகிறது இந்த பகுதியில் தனியார் சார்பில் துறைமுக வளாகத்தில் தொழிற் கூடம் அமைக்க முடிவு செய்தது ஆனால் குடியிருப்பு பகுதியில் இந்த தொழில் அமைந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனை வேறு பகுதிக்கு கொண்டு செல்லும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion