மேலும் அறிய

Madurai AIIMS : எய்ம்ஸ்-ல் எஞ்சிய 5 சதவீத பணிகள் முடிந்தால் மருத்துவம் பார்க்கலாமா..? சபாநாயகர் அப்பாவு கிண்டல்

அ.தி.மு.க. பிளவால் எந்த பிரச்சனையும் சட்டப்பேரவையில் வராது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் நொச்சி குளத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கபாண்டியன் கிராம ஊராட்சி தலைவர் வேலம்மாள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கிராமத்தின் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கிராம வளர்ச்சி குறித்து அரசு உயர் அதிகாரிகள் பொதுமக்களிடம் எடுத்துரைத்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து நிருபர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசும் பொழுது, "காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைப்பெறுகிறது. ஆனால், காந்தியை  கொன்றவர்களை மதிக்க கூடாது. அவர்களை மதிப்பது வேதனைக்குரியது" என்றார். 

Madurai AIIMS : எய்ம்ஸ்-ல் எஞ்சிய 5 சதவீத பணிகள் முடிந்தால் மருத்துவம் பார்க்கலாமா..? சபாநாயகர் அப்பாவு கிண்டல்

தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக 4 அணிகளாக உள்ளது. இருவரும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் ஒருவருக்கு ஆதரவு என்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் ஒருவருக்கு ஆதரவு என்கின்றனர். இதனையெல்லாம் தாண்டி தேர்தல் ஆணையம் ஒன்று உள்ளது.  அரசியல் கட்சிகளுக்கு முடிவு சொல்லக்கூடிய இடம் தேர்தல் ஆணையம் தான்.  அதிமுக பிளவால் எந்த பிரச்சனையும் சட்டப்பேரவையில் வராது. இந்த மாதம் கூட இருக்கும்.

சட்டப்பேரவை கூட்டத்தின் போது அனைவரும் மகிழ்ச்சியாக  இருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும். திமுக அரசின் நல்ல திட்டங்களை செயல்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சர்களின் சாதாரணமாக பேச்சு வழக்கில் பேசுவது கூட ஊடகங்களில் பெரிதாக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்களுக்கு படிப்பறிவு இல்லை என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்திருப்பது வன்மையான வார்த்தை என தெரிவித்தார்.

Madurai AIIMS : எய்ம்ஸ்-ல் எஞ்சிய 5 சதவீத பணிகள் முடிந்தால் மருத்துவம் பார்க்கலாமா..? சபாநாயகர் அப்பாவு கிண்டல்

நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை கருதில் கொண்டே ஜேபி நட்டா படிப்பறிவில்லை என தெரிவித்துள்ளார். இந்தியாவில் பட்டதாரிகள்  சராசரி 24% என்றால் தமிழகத்தில் 51% ஆக உள்ளது. ஜே.பி நட்டா எங்களை விட எங்கள் மாநிலத்தை விட அதிகம் படித்தவர்  என அவரை நான் மதிக்கிறேன்.

மதுரையில் 95 % மருத்துவ பணிகள் எய்ம்ஸ் மருத்துவமனையில் முடிவடைந்தாக ஒரு கிரவுண்டை காட்டி சொன்னார்கள். அங்கு 5% பணி முடிந்த உடனே நாம் எல்லோரும் மருத்துவம் பார்க்க செல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார். எனவே திட்டமிட்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நல்லாட்சி நடப்பதை கொச்சை படுத்தும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். இது திராவிட பூமி. 1921 இல் இருந்து நீதிக்கட்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை எல்லா மக்களை பற்றி சிந்திக்க கூடிய ஆட்சி நடக்கிறது. அதனை கொச்சைப்படுத்த  நினைக்கிறார்கள். ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிது படுத்தாமல் அரசின் திட்டங்களை சிறப்பாக செய்ய ஆலோசனை வழங்குகள் என வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Embed widget