மேலும் அறிய
கஞ்சா அடித்து கழட்டிவிட்ட காதலி.. மண்டையை உடைத்த காதலன்...குமரியை அதிர்ச்சியாக்கிய சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நடைபெற்ற JOINT பார்ட்டியில் தன்னை கழற்றிவிட்டு சென்ற காதலியின் மண்டையை கட்டையால் உடைத்த காதலன்.

பங்களா
கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த "கிப்டி" என்ற இளம் பெண் மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது குளச்சல் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “நான் குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு எனது ஆண் நண்பர்கள் ஆகாஷ், மணிகண்டன், கல்லூரி தோழிகள் 2 பேர் ஆகியோருடன் எனது பிறந்தநாள் பார்ட்டிக்காக தயாராகி கொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்த எனது பள்ளி தோழன் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த அஜின் வீட்டிற்குள் புகுந்து எனது நண்பர்களை கம்பால் தாக்கி விரட்டியதோடு தன்னையும் மண்டையில் கட்டையால் அடித்து மண்டையை உடைத்து தப்பியோடியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குளச்சல் போலீசார் தாக்குதல் நடத்தி தப்பியோடிய அஜினை தேடி வரும் நிலையில், சம்பவம் நடந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்த போது, சிகரெட் துண்டுகள், ஆங்காங்கே வீசப்பட்டு கிடந்த ஆடைகள், ஆணுறைகளை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் "கிப்டி" குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

20 வயதான கிப்டி கருங்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் தனது பள்ளி தோழனான அஜினை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்
காதலனுடன் பைக்கில் டிரிப் அடித்து பகலில் சந்தோஷமாக சுற்றி வரும் கிப்டி இரவில் காதலனுக்கு தெரியாமல் தான் வசிக்கும் பங்களா வீட்டிற்கு வேறு சில ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது விருந்து மற்றும் ஜாய்ன்ட் என கோட் வேர்ட் இல் அழைக்கப்படும் கஞ்சா புகைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் ஆண் நண்பர்களுடன் சந்தோஷமாக இருந்த கிப்டி தனது தோழிகளை மதுவுக்கு அடிமையாக்கி அவர்களை தனது ஆண் நண்பர்களுக்கு கிப்ட் ஆக்கியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த காதலன் அஜின் கிப்ட்டியை கண்டித்த நிலையில், ‘வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா என்னை நம்பாதே என்னைப்போல் நீயும் என்ஜாய் பண்ணு’ என்று கிப்டி பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அஜினின் காதலை பிரேக் அப் செய்துள்ளார்.

இந்த நிலையில் தான், கிப்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் தனது பெரியப்பாவின் பங்களா வீட்டில் மது விருந்துடன் உல்லாசமாக இருப்பதாக தகவல் அறிந்து அந்த வீட்டிற்கு சென்ற அஜின் பங்களா வீட்டின் அருகே நின்ற மரத்தில் மளமளவென ஏறி மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது கிப்டி மற்றும் அவரது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்கள் மது போதையில் அரைகுறை ஆடையில் இருந்ததாக தெரிகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அஜின் அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து ஆவேசமாக அறைக்குள் சென்று அரைகுறை ஆடையில் இருந்த கிப்டியின் நண்பர்களை ஓடஓட விரட்டியதோடு கிப்டியின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்து மண்டையை உடைத்துள்ளார்

கிப்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட அஜின் அங்கிருந்து தப்பியோடிய விபரமும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அஜினை தேடி வரும் நிலையில் கிப்டியின் ஆண் நண்பர்கள் குறித்தும் கிப்டியால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் குறித்தும் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து வரும் நிலையில், அஜின் தாயார் கிப்டியால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தனது மகன் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால் அந்த ஆதாரங்களை வெளியிடுவேன் என பேசிய நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் குமுறலுடன் அஜினின் தாயாருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ஆடியோவும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெண் பிள்ளைகள் தோழிகளின் அழைப்பை ஏற்று இரவு பெற்றோருக்கு தெரியாமல் தோழிகள் ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டால் என்ன மாதியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி என அப்பகுதி மக்கள் எச்சரிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement