மேலும் அறிய

நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

மாவட்டத்தில் நிரம்பும் தருவாயில் உள்ள ஏரி குளங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என நெல்லை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் சிறப்பு அதிகாரி அபூர்வா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட  அபூர்வா ஐ.ஏ.எஸ்,   ஐ.பி.எஸ் அதிகாரி அபின் தினேஷ் மொடாக் ஆகியோர்  தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது, 
இந்த கூட்டத்தில், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரை கண்ணன், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினபு, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உட்பட வருவாய் துறை, சுகாதார துறை, உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பாதிப்பு ஏற்பட்டால் செய்யக்கூடிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளான  டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொசுப்புழு தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாவட்ட பேரிடர் கண்காணிப்பு சிறப்பு அதிகாரி அபூர்வா ஐ.ஏ.எஸ் கூறும்  பொழுது,  வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். நெல்லை மாவட்டத்தில் உள்ள சூழல் குறித்து தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம், நெல்லை மாவட்டத்தில் உள்ள 6  அணைகள் மூலம் வட கிழக்கு பருவமழையால் எந்த பாதிப்பும் தற்போது வரை இல்லை. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது,  நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் 50 சதவீததிற்கும் மேல் 50% நீர் இருப்பு உள்ளது. 10% குளங்களில் 90% க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நெல்லை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிதலமடைந்த சாலைகளை மழையினால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக செப்பனிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

முன்னதாக வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கபட்ட ஐபிஎஸ் சிறப்பு அதிகாரி, நெல்லை மாநகர பகுதிகளில் ஏற்கனவே அதிக கனமழையின் போது வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உடையார்பட்டி, தாமிரபரணி ஆற்றுப் பாலம், கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலம் மற்றும் தாமிரபரணி ஆற்றுப் படுகைகளை ஆய்வு செய்தார், இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, விகேபுரம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும், அணைக்கட்டு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அதிகனமழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்யக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளபாதிப்பில் பொதுமக்கள் சிக்கியிருந்தால் அவர்கள் அங்கிருந்து மீட்க தேவையான நடவடிக்கைகள், பாதிப்பிற்கு முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் அப்புறப்படுத்தவதற்கான வழிகள், மீட்பு பணிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்வதற்கான பாதைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர காவல்துறையின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டல துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Embed widget