மேலும் அறிய

ABP Nadu Impact: மீண்டும் விஸ்பரூபம் எடுக்கும் நெல்லை திமுகவினரின் உட்கட்சி பூசல்..! காலை செய்தி வெளியிட்ட நிலையில் மாலையே வெட்ட வெளிச்சம்..!

”மேயர் பதவியேற்புக்கு முன்னரே கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பது விஸ்பரூபம் எடுத்துள்ளது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது”

 நெல்லை மாநகர திமுகவில் பிளவு:

நெல்லை மாநகராட்சியில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் முன்னாள் மேயர் எதிர்ப்பு அணி, ஆதரவு அணி இரண்டு அணிகளாக செயல்படுவதாக பேசப்பட்டது.  இதனாலேயே மேயர் சரவணனுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மாநகராட்சியில் மக்கள் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தான் மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னராவது கட்சிக்குள் பிரச்சினையின்றி சுமுகமாக செல்ல வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தி சுமுகமாக புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால் மேயர் தேர்தல் அன்றே கட்சி தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தற்போதைய சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக 23 ஓட்டுகள் விழுந்தது. 7 ஓட்டு வித்தியாத்தில் தான்  ராமகிருஷ்ணன் என்ற கிட்டு மேயராக தேர்வு செய்யப்பட்டார். தலைமையின் பேச்சிற்கு கட்டுப்படாமல் போட்டி வேட்பாளருக்கு திமுகவினரே ஓட்டு போட்டது கட்சிக்குள் பிளவு இருப்பதை காட்டுவதாக கூறப்பட்டது. 

வெட்ட வெளிச்சமாகிய கட்சி பிளவு:

கட்சிக்குள் இரண்டு அணியாக பிளவு பட்டிருப்பதாக பேசப்பட்ட நிலையில் ஏபிபியின் களசூழல் ஆய்வு படி  தற்போது 5 அணிகளாக பிளவு பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டோம். குறிப்பாக மாவட்ட செயலாளர் அணி, எம்எல்ஏ அணி, முன்னாள் எம்எல்ஏ அணி,  மாநகர செயலாளர் அணி, இவர்கள் யாரையும் சாராத ஓர் அணி இருப்பதாக கிடைத்த தகவலின் படி கணிக்கப்பட்டது. இது எதிர்வரும் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் உரிய நடவடிக்கையை தலைமை எடுக்காவிடில் நெல்லையில் திமுக சரிவை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அடிமட்ட தொண்டர்கள் வரை பேசப்பட்டது. இதனை  ஏபிபி நாடு மூலம் நாம் காலை செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இதற்கு  சாட்சியாக மாலையே திமுக நெல்லை மாநகர திமுக செயலாளர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அடுத்த அணியை வீழ்த்தும் ஆயுதமாகவே செயல்படும் மாநகர திமுக அணியினர்:

அதில் திருநெல்வேலி மாநகர திமுகவில் உள்ள நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர், மாவட்ட பொறுப்பாளர் ஆகியோரிடம் இருந்து வருவதை மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையீடுகள் கழக சட்ட விதிமுறைக்கு உட்பட்டதில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.. மேலும் தங்களை யாராவது அமைப்பு மற்றும் நிர்வாக ரீதியாக இடையூறு செய்தால் அவர் தொடர்பாக புகார் அளிக்கலாம், எனவே நிர்வாகிகள் மாவட்ட கழகத்திற்கும், மாநகர கழகத்திற்கும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்  என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான அப்துல்வகாப் நாளை நடைபெறும் மேயர் பதவியேற்பு விழாவிற்கு மாமன்ற உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இது கட்சிக்குள் பிளவு இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக மாமன்ற உறுப்பினர்கள் பிரச்சினையானது மாமன்ற கூட்டத்தில் எதிரொலித்தது கூட ஒரு அணி மற்றொரு அணியை வீழ்த்துவதற்கான ஆயுதமாகவே பயன்படுத்தியதே தவிர மாநகராட்சியின் பிரச்சினையை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளவில்லை என்றே தொண்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் மேயர் பதவியேற்பு குறித்து இருதரப்பும் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் கட்சியை சேர்ந்த பலரும் அந்த தரப்பிற்கு ஆதரவாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதலங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.  மேயர் பதவியேற்புக்கு முன்னரே கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பது விஸ்பரூபம் எடுத்துள்ளது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget