மேலும் அறிய

திருவாரூர்: நண்பர்கள் தினத்தன்று மூன்று நண்பர்கள் தற்கொலை முயற்சி - ஒருவர் உயிரிழப்பு

நண்பர்கள் தினத்தன்று மூன்று நண்பர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி. ஒருவர் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்துள்ள கப்பளுடையான் கிராமத்தில் தந்தை திட்டியதால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை. அவரோடு தற்கொலைக்கு முயன்ற நண்பர்கள் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26). இவரது தந்தை பெயர் கார்த்திகேயன். தந்தை கார்த்திகேயன்  விவசாயம் செய்து வருகிறார். ஆனந்த் அவருடைய நண்பர்கள் அசோக்குமார் (வயது 26), ஆசைத்தம்பி (வயது 28) ஆகிய மூன்று பேரும் இணைபிரியாத நண்பர்கள். மூன்று பேருக்கும் இதுவரை திருமணம் ஆகவில்லை. 
 
இவர்கள் குறிப்பிட்ட எந்த வேலையும் செய்யாமல் சிறு சிறு கூலி வேலைகளை மட்டும் செய்து கொண்டு ஊர் சுற்றி வந்துள்ளனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது போதையில் ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மீது இருசக்கர வாகனத்தை விட்டு மோதி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்  சமாதானமாக பேசி காயம்பட்டவரை அவரது பெற்றோர் பேசி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மூன்று பேரும் இரவில் தினந்தோறும் மது அருந்தியும் வந்துள்ளனர்.  இதனை பெற்றோர்கள் பலமுறை கண்டித்தும் மூன்று பேரும் திருந்தவில்லை. இந்நிலையில் ஆனந்தை அழைத்த அவரது தந்தை கார்த்திகேயன் கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த ஆனந்த் தனது நண்பர்களான ஆசைத்தம்பி மற்றும் அசோக்குமார் ஆகியோரோடு மது அருந்தும்போது தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட இவரது நண்பர்கள் அசோக்குமார் மற்றும் ஆசைத்தம்பி ஆகிய இருவரும் நீ மட்டும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என்று சொல்லி மூன்று பேரும் மது வாங்கி வந்து அதில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளனர். 

திருவாரூர்: நண்பர்கள் தினத்தன்று மூன்று நண்பர்கள் தற்கொலை முயற்சி - ஒருவர் உயிரிழப்பு
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த மூவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் (வயது 26) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அசோக்குமார் மற்றும் ஆசைத்தம்பி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தந்தை திட்டியதன் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் நீடமங்கலம் காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருவாரூர்: நண்பர்கள் தினத்தன்று மூன்று நண்பர்கள் தற்கொலை முயற்சி - ஒருவர் உயிரிழப்பு
நண்பர்கள் தினத்தன்று நண்பர்கள் மூவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அதில் ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

தலைப்பு செய்திகள்

தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
AIADMK: கூண்டோடு நீக்கம்.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
AIADMK: கூண்டோடு நீக்கம்.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget