கட்டப்பட்டு 8 ஆண்டுகள்தான் ஆச்சு! மேற்பூச்சு இடிந்து விழுந்ததில் வாலிபரின் மண்டை உடைந்தது!
போதிய பராமரிப்பு இல்லாததாலும், கட்டுமானத்தின் உறுதியிண்மையாலும் அவ்வப்போது இடிந்து விழுந்து வருவது குறித்து புகைப்படத்துடன் புகார் அளித்துள்ளோம். ஆனால், இன்று வரை அதிகாரிகள் கவனம் செலுத்தாததால் தற்போது இந்த விபத்து நடந்துள்ளது.
தூத்துக்குடி ராஜீவ் காந்தி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அருண் பாண்டி என்ற வாலிபர் படுகாயம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கிராமத்தில் தருவைகுளம் சாலையில் ராஜீவ்நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 37 கட்டிடங்களில் சுமார் 440க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட கட்டிடங்கள் உள்ளது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை இழந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி செலவில் கட்டப்பட்டதாகும்.
கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததாலும், கட்டுமானத்தின் உறுதியிண்மையால் அவ்வப்போது இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து மேம்பாட்டு வாரியத்தின் பொறியாளர் மற்றும் ஆட்சியருக்கு குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பலமுறை புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணியளவில் மாடியில் குடியிருந்து வரும் மாடத்தி என்பவர் வீட்டில் அவருடைய சகோதரர் அருண்பாண்டியன் (22) உறங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் அவர் மீது கான்கிரீட் பூச்சு மேலே விழுந்துள்ளது. இதில் அருண்பாண்டியன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். வீடு இடிந்த சத்தம் கேட்டு வெரண்டாவில் தூங்கி கொண்டிருந்த அவரது தந்தையும், தாயும் உடனடியாக அரசுமருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அருண்குமாரை தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் கடும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து, வாரிய குடியிருப்பு நலச்சங்க தலைவர் கொளஞ்சியம் கூறுகையில், இந்த குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறோம். வருமான ஆதாரம், வழியில்லாமல் இருந்து வரும் எங்களைப் போன்ற மக்கள் அரசுக்கு ரூ.41 ஆயிரம் கட்டி குடியிருப்பில் வசித்து வருகிறோம். கடந்த வெள்ளத்திற்கு முன்பும், பின்பும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், வாரிய தலைமை பொறியாளரிடமும் புகார் அளித்துள்ளோம். போதிய பராமரிப்பு இல்லாததாலும், கட்டுமானத்தின் உறுதியிண்மையாலும் அவ்வப்போது இடிந்து விழுந்து வருவது குறித்து புகைப்படத்துடன் புகார் அளித்துள்ளோம்.
ஆனால், இன்று வரை அதிகாரிகள் கவனம் செலுத்தாததால் தற்போது இந்த விபத்து நடந்துள்ளது. படுகாயமடைந்த அருண்குமாரின் தாய், தந்தை வெளியே படுத்து உறங்கியதால் தப்பித்தனர். வீட்டின் உள்ளே படுத்திருந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். குடியிருப்பில் வசித்துவரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் வரும் காலங்களிலாவது அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தி அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.