மேலும் அறிய

மணல் கடத்தல் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ! தந்தையின் கனவை நனவாக்கிய மகன்..!

தந்தையின் கனவை நினைவாக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தற்போது மேஜிஸ்ட்ரேட்டாக தேர்வாகியுள்ளேன். எனது தந்தையை போன்றே எனது பணியிலும் நான் நேர்மையாக பணியாற்றுவேன்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் சேவியர் கடந்த 25.04.2023 அன்று கொலை செய்யப்பட்டார். இக்கொலை குற்றவாளிகள் ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கொலை நடந்த 143வது நாளான 15.09.2023 அன்று குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம். நீதிபதி எம். செல்வம் தீர்ப்பு வழங்கினார். தற்போது ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வு அறிவித்தது, இதில் விண்ணப்பித்த கொலையுண்ட லூர்து பிரான்சிஸ் சேவியர் மகன் மார்ஷல் ஏசுவடியான், தனது தந்தை கொலை செய்யப்பட்ட சோகத்தில் இருந்து வந்த நிலையில், தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் மேற்படி தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மார்ஷல் ஏசுவடியான் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூசைபாண்டியாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று, அவருக்கு சால்வை அணிவித்து, அவரது பணி சிறக்கவும், மென்மேலும் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற வேண்டுமென பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அவருடன் தூத்துக்குடி பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் வாக்கரே அக்ஷய் அனில் மற்றும தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் ஆகியோரும் வாழ்த்தினர்.

Tamil Nadu Budget 2024-2025 LIVE: மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வியை அரசே ஏற்கும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

இதுகுறித்து மார்ஷல் ஏசுவடியான் கூறும் போது, “நான் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பி எஸ் பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தேன். என்னை நேர்மையான நீதிபதியாக்க வேண்டும் என்பது எனது தந்தை லூர்து பிரான்சிஸின் கனவாக இருந்தது. இதற்காக அவர் என்னை தரமணியில் உள்ள சீர்மிகு சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஏஎல்எல் பி பிரிவில் சேர்த்து படிக்க வைத்தார். எதிர்பாராத விதமாக நான் படித்து முடிக்கும் தருவாயில் எனது தந்தையை இழந்துவிட்டேன். ஆனாலும் அவரது கனவை நினைவாக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தற்போது மேஜிஸ்ட்ரேட்டாக தேர்வாகியுள்ளேன். எனது தந்தையை போன்றே எனது பணியிலும் நான் நேர்மையாக பணியாற்றுவேன்” என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: 100 ரன்களை கடந்த பெங்களூரு; விக்கெட் எடுக்குமா டெல்லி?
RCB vs DC LIVE Score: 100 ரன்களை கடந்த பெங்களூரு; விக்கெட் எடுக்குமா டெல்லி?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: 100 ரன்களை கடந்த பெங்களூரு; விக்கெட் எடுக்குமா டெல்லி?
RCB vs DC LIVE Score: 100 ரன்களை கடந்த பெங்களூரு; விக்கெட் எடுக்குமா டெல்லி?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
Embed widget