100 நாளும் வேலை தருகிறேன்.. வேலை செய்யனும் மரத்தடியிலேயே உக்காரக் கூடாது - தூத்துக்குடி ஆட்சியர்
உங்களுக்கு 100 நாளும் வேலை கொடுப்பதற்கு அறிவுறுத்துகிறேன். ஆனால் வேலை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினர்.
100 நாள் வேலை தருகிறேன் - ஆனால் வேலை செய்ய வேண்டும் - கோரிக்கை வைத்த பெண்ணிடம் அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர்.. எழுந்த சிரிப்பலை-ஓட்டப்பிடாரம் அருகே மக்களுடன் முதல்வர் முகாமில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ஊரகப் பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போது வென்றானில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி முகாமை தொடங்கி வைத்தார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மரக்கன்றுகளை நட்டினார். அப்போது முகாமில் பெண்மணி ஒருவர் தனது பட்டாவை மாற்றம் செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தார்.இதனை ஓட்டப்பிடாரம் தாசில்தாரிடம் உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார் அப்போது அங்குள்ள ஒரு மூதாட்டி ஒருவரிடம் மாவட்ட ஆட்சியர் மூதாட்டியிடம் இங்கே எதற்கு மூதாட்டியிடம் என்று கேட்ட போது சாரை பார்க்கத்தான் வந்துள்ளோம் என்று தெரிவித்தார். அந்தப் பெண்மணி 100 நாள் வேலையில் ஒரு மாதம் தான் வேலை கொடுக்கிறார்கள் 50 பேருக்கு தான் வேலை தருகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் உங்களுக்கு 100 நாளும் வேலை கொடுப்பதற்கு அறிவுறுத்துகிறேன்..ஆனால் வேலை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினர். இதற்கு சிரிப்பலை எழுந்த அதே நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் யாரும் வேலை பார்ப்பதில்லையா என்ற கோணத்தில் ஆட்சியர் எழுப்பிய கேள்வி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.