மேலும் அறிய

பழிக்குப் பழியாக நடந்த கொடூர கொலை! ஜாமீனில் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தூத்துக்குடியில் பரபரப்பு

மெஞ்ஞானபுரம் வேப்பங்காடு அந்தோனியார் கெபி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சினிமா பாணியில் காரை மோதவிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அடுத்துள்ள தாமரைமொழி பகுதியைச் சேர்ந்தவர் கந்தையா இவருக்கு வயது 48. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப முன் பகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரும், அரசப்பன் என்பவரின் மகனுமான சிவசூரியன்(34) என்பவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிவசூரியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் அக்டோபர் 8ம் தேதி சிவசூரியன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று காலையில் தட்டார்மடம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார். அங்கு போலீசார் அவரை மாலையில் வந்து கையெழுத்து போடுமாறு கூறியுள்ளனர். உடனே சிவசூரியன் அங்கிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவருடன் அவரது அண்ணன் சின்னதுரையும் சென்றுள்ளார்.

பழிக்குப் பழியாக நடந்த கொடூர கொலை! ஜாமீனில் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தூத்துக்குடியில் பரபரப்பு

மெஞ்ஞானபுரம் வேப்பங்காடு அந்தோனியார் கெபி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சினிமா பாணியில் காரை மோதவிட்டுள்ளனர். இதனால் இருவரும் கீழே சரிந்து விழுந்தனர். பின்னர் காரில் வந்தவர்கள் அரிவாளுடன் இறங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தோட்டத்திற்குள் ஓடினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் சிவசூரியனை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அவரது அண்ணன் சின்னதுரைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவசூரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழிக்குப் பழியாக நடந்த கொடூர கொலை! ஜாமீனில் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தூத்துக்குடியில் பரபரப்பு

காயமடைந்த சின்னதுரையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிவசூரியன் பழிக்குப் பழியாக முன் பகை காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக நடுவக்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் (52), கார்த்திக் (26), முத்துபாண்டி (32), மற்றொரு கார்த்தி (25) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ஆறுமுகம் என்பவர் சிவசூரியனால் கொலை செய்யப்பட்ட கந்தையாவின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget