மேலும் அறிய

Thamiraparani River: சாக்கடையாகும் தாமிரபரணி; மூச்சு திணறும் இயல்பு வகை மீன்கள்- பாதுகாக்க கோரிக்கை

இதுவரை தாமிரபரணி நதிக்காக அரசு ஒதுக்கிய நிதி முறையாக செலவிடப்படவில்லை. நதியை சார்ந்து 100க்கும் மேற்பட்ட இயல் மரங்கள் செடிகள் இருந்த நிலையில் அவற்றில் பல அழிந்து விட்டது.

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதியை பாதுகாத்து வரும் மீன் இனங்கள் அழிவை நோக்கி செல்கின்றன-ஆய்வாளர்கள்

Thamiraparani River: சாக்கடையாகும் தாமிரபரணி; மூச்சு திணறும் இயல்பு வகை மீன்கள்- பாதுகாக்க கோரிக்கை

தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதி மற்றும் தாமிரபரணியின் மீன் வகைகள் அவற்றின் தற்போதைய சூழல் குறித்து விரிவான கருத்தரங்கம் திருநெல்வேலி ரஹ்மத் நகரில் செயல்பட்டு வரும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடைபெற்றது. அகத்தியர் மலை காப்பகம், மாவட்ட நிர்வாகம், இயற்கை அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் தாமிரபரணி நதி மற்றும் அதனுடைய தற்போதைய நிலை குறித்து விரிவாக பேசப்பட்டது. அதேபோன்று முக்கியமாக தாமிரபரணி நதியில் இருக்கும் மீன் வகைகளும் அவற்றின் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

Thamiraparani River: சாக்கடையாகும் தாமிரபரணி; மூச்சு திணறும் இயல்பு வகை மீன்கள்- பாதுகாக்க கோரிக்கை

தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்கு ஆதரவாகவும் இருந்து வரும் வற்றாத ஜீவநதி தாமிரபரணி சுமார் 128 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. தாமிரபரணி நதியில் சுமார் எட்டு தடுப்பணைகள் உள்ளது இன்றளவுக்கும் ஒரு சில இடங்களில் குடிக்கும் அளவிற்கு தண்ணீர் தரம் இருக்கும் அதே சூழலில் தற்போது தாமிரபரணி ஆட்சியில் கலக்கும் விவசாய கழிவுகள், ஆலை கழிவுகள், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் இருக்கும் பேராபத்தை விளைவிக்கும் கழிவுகள் காரணமாக தாமிரபரணி மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Thamiraparani River: சாக்கடையாகும் தாமிரபரணி; மூச்சு திணறும் இயல்பு வகை மீன்கள்- பாதுகாக்க கோரிக்கை

இந்த சூழலில் தாமிரபரணி நதி குளிக்கும் தரத்திற்காவது இருப்பதற்கும் தாமிரபரணி நதி முழுமையாக மாசடையாமல் பாதுகாப்பதில் மறைமுகமாக உதவி செய்து கொண்டிருப்பது மீன்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 128 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் தாமிரபரணி ஆற்றில் சுமார் 125 வகையான இயல் மீன் வகைகள் இருப்பதாகவும் மிகப்பெரிய வளமான இந்த மீன்கள் தற்போது தாமிரபரணி ஆற்றின் மோசமான நிலையால் தாமிரபரணி ஆற்றில் இயல்பு மீன்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றின் இயல்பு மீன் வகைகளால் தான் தாமிரபரணி நதி பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அந்த மீன்களை பாதுகாக்க வேண்டிய தேவை சமகாலத்தில் எழுந்துள்ளதாகவும் சூழியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆப்பிரிக்கா வகை கெளுத்தி மீன்களால் தாமிரபரணி நதியில் இருக்கும் இயல்பான மீன் வகைகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் தான் மீன்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை மற்றும் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்படுவதாகவும் வரும் மார்ச் மாதம் மூன்றாம் தேதி முதல் தாமிரபரணி நதியில் இருக்கும் மீன்கள் குறித்த கணக்கெடுப்பை திட்டமிட்டுள்ளதாகவும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

Thamiraparani River: சாக்கடையாகும் தாமிரபரணி; மூச்சு திணறும் இயல்பு வகை மீன்கள்- பாதுகாக்க கோரிக்கை

மேலும் தாமிரபரணி நதியை மறுசீரமைப்பதில் பல்வேறு சவால்கள் இருப்பதாகவும் இதுவரை தாமிரபரணி நதிக்காக அரசு ஒதுக்கிய நிதி முறையாக செலவிடப்படவில்லை எனவும் தெரிவித்தார். நதியை சார்ந்து 100க்கும் மேற்பட்ட இயல் மரங்கள் செடிகள் இருந்த நிலையில் அவற்றில் பல அழிந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget