மேலும் அறிய

தூத்துக்குடியில் கண்கவர் காட்சி! ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் வலசை: விவசாயிகளுக்குப் பெரும் நன்மை!

தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு வலசை வந்த ஆயிரக்கணக்கான ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் கண்கவர் வான்வழி காட்சிகளை உருவாக்கின.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், குறிப்பாக பெருங்குளம் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு வலசை வந்த ஆயிரக்கணக்கான ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் கண்கவர் வான்வழி காட்சிகளை உருவாக்கின.

தூத்துக்குடியில் கண்கவர் காட்சி! ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் வலசை: விவசாயிகளுக்குப் பெரும் நன்மை!

இதுகுறித்து மாவட்ட வனத்துறையினர் கூறுகையில், தூத்துக்குடி ஒரு கடலோர மாவட்டம் என்பதால், ஒவ்வொரு குளிர்காலத்திலும் பல வகையான பறவைகள் வலசை வருவதை இங்கு காண முடிகிறது. சமீபத்தில், பெருங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோஸி ஸ்டார்லிங் பறவைகளின் பெரும் வருகையை காண முடிந்தது. ரோஸி ஸ்டார்லிங் பறவையானது ஸ்டார்லிங் குடும்பத்தைச் சேர்ந்தது. இவை மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள புல்வெளிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. பனி மற்றும் குளிர் பிரதேசங்களில் வசிக்கும் பறவைகள் ஆண்டுதோறும் ஜூலை-ஆகஸ்ட் முதல் ஏப்ரல்-மே வரை அவை இந்தியாவைப் போன்ற வெப்பமண்டலப் பகுதிகளுக்கு வலசை வலசை போகின்றன.

பனிக் காலங்களில் கடும் குளிா் வாட்டும்போது உணவு கிடைக்காத சூழ்நிலை ஏற்படுவதால், பல ஆயிரம் கி.மீ. தொலைவை கடந்து மிதமான தட்பவெப்ப நிலை நிலவுகின்ற இந்தியப் பகுதிகளுக்கு அந்தப் பறவைகள் படையெடுக்கின்றன. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பெருங்குளம் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு குளிர்காலத்தில் வந்து இங்கு தங்கி, பனி காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கியதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குப் பிறகு இந்த பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி விடும்.

தூத்துக்குடியில் கண்கவர் காட்சி! ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் வலசை: விவசாயிகளுக்குப் பெரும் நன்மை!

குஜராத்தில் இருந்து தெற்கு நோக்கி வரும் வரை இந்த ரோஸி ஸ்டார்லிங் பறவைகளின் வலசையைக் காண முடியும் என்றும் அவர் கூறினார். தூத்துக்குடியில் ஈரநிலங்கள் உள்ளன. வலசை வரும் பறவைகளுக்குத் தேவையான உணவு, உறைவிடம், பாதுகாப்பு போன்றவை கிடைப்பதும், தட்பவெப்பநிலையும் அவற்றின் வலசைக்கு முக்கிய காரணங்கள். இந்த ஈரநிலமும் விவசாய நிலங்களும் இணைந்து, இந்த வலசைப் பறவைகளுக்கு ஒரு சிறந்த வாழ்விடத்தை வழங்குகின்றன. அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். இந்த ஆண்டு அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது  என்று கூறினர்.

மேலும் , வெளிநாடுகளிலிருந்து நமது பகுதிக்கு அழையா விருந்தாளிகளாக வரும் பறவைகளின் வாழிவிடங்களை மாசுபடாமல் பாதுகாப்பது, வேட்டையாடுவதை தடுப்பது, பறவைகளை அச்சுறுத்தாமல் இருப்பது போன்றவற்றை கண்காணிப்பது நமது கடமை என்றும் கூறினர். இந்தப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வருவதால், அவை வெட்டுக்கிளிகள் மற்றும் பிற பூச்சி வகைகளை முக்கியமாக உண்ணுகின்றன. ஸ்டார்லிங் பறவைகள் வெட்டுக்கிளிகளை உண்பதால், அவை விவசாயிகளின் விளைநிலங்களைக் காப்பாற்றுகின்றன. அவை விவசாயிகளுக்குப் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள கடலோரப் பகுதி, பறவைகளின் செயல்பாடுகளின் பரபரப்பான மையமாக மாறியுள்ளது. தூத்துக்குடி துறைமுக கடற்கரையின் முகத்துவாரப் பகுதியில் பெரிய அளவிலான நீர்ப்பறவைக் கூட்டங்கள் கூடுகின்றன. சமீபத்திய கனமழை காரணமாக, தூத்துக்குடியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள உப்பள பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பொதுவாக உப்பு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த உப்பள பகுதிகளில், இப்போது இயற்கையான நீர்நிலைகளைப் போலவே காட்சியளிக்கின்றன.

தூத்துக்குடியில் கண்கவர் காட்சி! ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் வலசை: விவசாயிகளுக்குப் பெரும் நன்மை!

இதன் விளைவாக, இந்த பகுதி பல வகையான நீர்ப்பறவைகளுக்கு உகந்த வாழ்விடமாக மாறியுள்ளது. சிறிய மீன்கள், பூச்சிகள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, இது பறவைகளுக்கு ஏராளமான உணவை வழங்குகிறது. உப்பள பகுதிகளில் நீர்ப்பறவைகள் இத்தகைய பெரிய அளவில் உணவு தேடும் செயல்பாடு பொதுவாக அரிதானது. இருப்பினும், இந்த ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட சூழ்நிலைகள், அந்தப் பகுதியை அவற்றுக்கு ஏற்ற ஒரு சூழலாக மாற்றியுள்ளன.

தற்போது, ​​பறவைக் கூட்டங்கள் உப்பள பகுதிகளில் தரையிறங்கி, ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் உணவுகளை தேடுவதைக் காண முடிகிறது. இந்த காட்சி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் பெருமளவில் பறவைகளைக் கண்டு ரசித்து வருகின்றனர். சமீபத்திய நாட்களில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய கூட்டமாக ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் வந்துள்ளன. அவை வானத்தில் கண்கவர் வடிவங்களில் பறப்பதைக் காண முடிகிறது.

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget