Accident: 6 பேரை காவு வாங்கிய கார் மீது ஏறிய லாரி! தென்காசி அருகே விபத்து நடந்தது எப்படி?
தென்காசி அருகே காரும் - சிமெண்ட் லாரியும் மோதிக் கொண்டதில் ஒரே பகுதியைச் சேர்ந்த 6 நபர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகதென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புன்னையாபுரம் பகுதியில் காரும்- சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் தற்போது உடல் நசுங்கி பலியாகினர். இந்த சம்பவம் அறிந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சொக்கம்பட்டி போலீசார் மற்றும் புளியங்குடி தீயணைப்பு துறையினர் உயிரிழந்த 6 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
6 பேர் உயிரிழப்பு:
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் கார்த்திக், வேல் மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ், மற்றும் ஒருவர் என ஆறு பேர் நேற்று இரவு ஷிப்ட் டிசைர் காரில் குற்றாலத்திற்கு குளிக்க புறப்பட்டுள்ளனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் புளியங்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த பொழுது புளியங்குடி அருகில் உள்ள சிங்கிலிப்பட்டிற்கும் புன்னையாபுரத்திற்கு இடையை ஓட்டுனர் கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் எதிர்பாராத விதமாக கேரள மாநிலத்திற்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது கார் மோதியதில், கார் மீது லாரி ஏரி இறங்கியதாக கூறப்படுகிறது. இதில் காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட ஆறு நபர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலையில் அவரும் பரிதாபமாக பலியானார். அதிகாலை நடந்த இந்த கோரச் சம்பவம் குறித்து காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரும், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவர்கள் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரை மணி நேரமாக கடுமையாக போராடி காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அங்கே முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு தற்போது போக்குவரத்து பாதிப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை நடந்த இந்த கோரச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒரே பகுதியைச் சேர்ந்த 6 நபர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தையும் புளியங்குடி பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.