மேலும் அறிய

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபர் சிக்கினார்

திருச்சி இபி ரோடு லூர்துசாமி பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தஞ்சாவூர்: திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த நபரையும் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி இபி ரோடு லூர்துசாமி பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது கமல நேரு பகுதியை சேர்ந்த காளிமுத்து (19) என்ற வாலிபர்போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காளிமுத்துவிடமிருந்து போதை மாத்திரைகள் ஊசிகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது

இதேபோல் எடமலைப்பட்டி புதூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

திருச்சி எடமலைப்பட்டி புதூர் குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் ராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அன்பிலார் நகரை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அஷ்ரப் அலியை கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

காந்தி மார்க்கெட்டில் வயர்கள் திருட்டு

திருச்சி காந்தி மார்க்கெட் பள்ளிவாசல் அருகில் புதிதாக ஒரு வீடு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக்கல் வயர் திருடப்பட்டது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் யாசர் அரபத் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரகனேரி முஸ்லிம் தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் (21) என்ற வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து எலக்ட்ரிக்கல் வயரை பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (38 ). இவர் தனது வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .மறுநாள் காலை பார்த்த பொழுது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை  போலீசார் இருசக்கர வாகனத்துடன் பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்
 .
இதையடுத்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை  நடத்திய போது கோவை மாவட்டம் சாய்பாபா நகரை சேர்ந்த சந்தோஷ் (24 ) என்பதும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரிய வந்தது மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்த போது அந்த இருசக்கர வாகனம் ஆரோக்கியதாஸ் யிடம் திருடி வந்தது என தெரிய வந்தது. இதையடுத்துபாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷத்தை கைது செய்து அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget