மேலும் அறிய

எப்போங்க திறப்பீங்க... 4 ஆண்டுகள் கடந்துடுச்சு: ஏக்கத்துடன் தஞ்சை மக்கள் எதிர்பார்த்திருப்பது எதற்காக?

தஞ்சை மக்களின் பொழுதுபோக்கு இடமான சிவகங்கை பூங்கா திறப்பது எப்போது என்ற ஏக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மக்களின் பொழுதுபோக்கு இடமான சிவகங்கை பூங்கா திறப்பது எப்போது என்ற ஏக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர். காரணம் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதுதான். 

மனநிம்மதியை தரும் இடமாக இருந்தது

தஞ்சை மக்களுக்கு மனசுக்கு மிகப்பெரிய மன நிம்மதியை தரும் இடமாக இருந்த சிவகங்கை பூங்கா பூடப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்தும் திறக்கப்படாத நிலையே நீடிக்கிறது. இதனால் மாலை வேளையில் விடுமுறை நாட்களில் மக்கள் பொழுதுபோக்க வேறு இடங்கள் இல்லாததும் ஒரு காரணம். இதனால் சிவகங்கை பூங்கா இதுநாள் வரை திறக்கப்படாது ஏன் என்று பொதுமக்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

எப்போங்க திறப்பீங்க... 4 ஆண்டுகள் கடந்துடுச்சு: ஏக்கத்துடன் தஞ்சை மக்கள் எதிர்பார்த்திருப்பது எதற்காக?

20 ஏக்கரில் பிரமாண்டமாக அமைந்துள்ளது

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் அருகில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா சுமார் 20 ஏக்கரில் 1871ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவின் உள்ளே 10 ஏக்கரில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்வற்றா குளமுமான சாமந்தன் குளமும் அமைந்துள்ளது. இப்பூங்காவில் பல ஆண்டுகள் பழமையான ஏராளமான மரங்கள் நிறைந்து இயற்கை நிழற் குடையாக சூழ்ந்திருக்கும். மான்கள், நரி, முள்ளம்பன்றி, சீமை எலி, முயல், உள்ளிட பல்வேறு வகையான மிருகங்களும், புறா, மயில், கிளிகள் என பறவைகளும் வளர்க்கப்பட்டு வந்தது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு

சிறுவர்களுக்கான ரயில், படகு சவாரி, நீச்சல் குளம், நீர்சறுக்கு விளையாட்டுகளும் இருந்தன. தஞ்சை மாவட்ட மக்களின் பேவரைட் பூங்காவாக இந்த சிவகங்கை பூங்கா திகழ்ந்து வந்தது. மாலை நேரத்தில் குடும்பம் குடும்பமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து சென்ற பெருமை மிக்கதுதான் சிவகங்கை பூங்கா. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 12 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வசதிகளை அமைப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கியது.  

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரங்களில் விலங்குகள் பராமரிக்க கூடாது என சட்டம் உள்ளதால் பூங்காவில் உள்ள மான்கள் மற்றும் நரி, சீமை எலி, புறா ஆகியவற்றை இடமாற்றம் செய்யப்பட்டன. 

இடமாற்றம் செய்யப்பட்ட மான்கள்

பூங்காவில் இருந்த 41 மான்களையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யபப்பட்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்கா முழுவதும் அலங்கார மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள், சேதமடைந்த இடங்களில் சுற்றுச்சுவர்கள் என பூங்காவில் பணிகள் முடிந்துவிட்டது. தற்போது இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகளும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

வர்ணம் பூசும் பணியும் நிறைவடைந்தது

மேலும் இன்னும் ஏராளமான பணிகள் நிறைவு பெற்றது. நுழைவாயில் அமைக்கப்பட்டு வர்ணம் பூசும் பணியும் முடிவடைந்தது.  எனவே முழுமையாக பணி முடிந்த சிவகங்கை பூங்காவை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தஞ்சை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நுழைவு கட்டணம் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைக்கும்.

மாலை நேரங்களில் தஞ்சை மக்கள் பொழுது போக்குவதற்கும், நடைபயிற்சி செய்வதற்கும் சிவகங்கை பூங்காவை பயன்படுத்துவர். ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்ற சீரமைப்பு பணி தற்போது முழுமையாக முடிவடைந்தும் திறக்கப்படாமல் இருப்பது தஞ்சை மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget