மேலும் அறிய

தஞ்சையில் விஏஓக்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் - விடுமுறை நாட்களிலும் பணிச்சுமை என புகார்

’’போதிய கால அவகாசம் அளிக்காமலும், பலதரப்பட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்க சொல்லி துறைரீதியான நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுவதை மாவட்ட நிர்வாகம் கைவிட கோரிக்கை’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் 53 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிவரன் முறை செய்யப்பட்டதை, மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ததை கண்டித்து  கிராம நிர்வாக அலுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் க.சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் தியாகராஜன், மாவட்ட இணை செயலாளர்கள் ராஜசேகரன், ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தஞ்சையில் விஏஓக்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் - விடுமுறை நாட்களிலும் பணிச்சுமை என புகார்

ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கருணை அடிப்படையில் 53 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அரசாணையின்படி, பணிவரன்முறை செய்யப்பட்டதை மாவட்ட நிர்வாகம் ரத்து  செய்துள்ளது.நீக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய காலத்தில் நில அளவை மற்றும் நிர்வாக பயிற்சி அளிக்க வேண்டும். சரியான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும், போதிய கால அவகாசம் அளிக்காமலும், பலதரப்பட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்க சொல்லி துறைரீதியான நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுவதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். பலமுறை வலியுறுத்தியும் அடங்கல் சான்று வழங்குவது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெளிவான சுற்றறிக்கை வழங்க வேண்டும். வருவாய் நிர்வாக ஆணையரின் சுற்றறிக்கையின்படி, கிராம நிர்வாக அலுவலர்களுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். தொடர்ந்து அனைத்து விடுமுறை நாட்களிலும் பணிச்சுமையை ஏற்படுத்துவதால், மனதளவில் ஏற்படும் பாதிப்பை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும், விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிகளை தவிர மற்ற பணிகள் செய்ய வலியுறுத்துவதை நிறுத்த வேண்டும்.

தஞ்சையில் விஏஓக்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் - விடுமுறை நாட்களிலும் பணிச்சுமை என புகார்

மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகளை அச்சுறுத்தி பதிவு பெற்ற சங்க நிர்வாகத்தை செயல்படவிடாமல் மாவட்ட நிர்வாகம் தடுப்பதை கைவிட வேண்டும், முன்கள பணியாளர்களுக்கான சலுகைகள் செலவினங்கள் மற்றும் பணப்பயன்களை மாவட்ட நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பெற்றுத்தரவேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற நிரந்தர மற்றும் தரமான அலுவலகம் அமைத்து தரவேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.முன்னதாக கடந்த 23 ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும், 25ஆம் தேதி அனைத்து கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 400 கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Embed widget