மேலும் அறிய

தஞ்சையில் உடல்  தானம் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி - நெகிழ்சியில் மருத்துவர்கள்...!

’’முக்கிய பொறுப்பில் உள்ள  நான்  உடல் தானம் செய்வதை பார்த்து விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிக சொந்தங்கள் பலரும் முன் வருவார்கள்’’

நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க தொடங்கி 29 வருடங்கள் நிறைவடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் உடல் தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனக்கு தனது உடலை தானம் செய்தார்.  விஜய் ரசிகரின் இச்சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஆதி.ராஜாராம். இவர் விஜய் மக்கள் இயக்கத்தில் பட்டுக்கோட்டை நகரத் தலைவராக உள்ளார். விஜய் மீதுள்ள ஆர்வத்துடன் தொடர்ந்து அப்பகுதியில் சமூக செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார். கூலி தொழிலாளி ஒருவரின் மகனுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி உறுதுணையாக இருந்ததால் அந்த சிறுவன் தற்போது நல்ல நிலையில் இருப்பது  குறிப்பிடத்தக்கது.

தஞ்சையில் உடல்  தானம் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி - நெகிழ்சியில் மருத்துவர்கள்...!

விஜய் சினிமாவில் நடிக்க தொடங்கி 29 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. விஜய் ரசிகர்கள் சில தினங்களாகவே இதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அதனை கொண்டாடும் வகையில், கோயில்களில் சிறப்பு  பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்து வழிப்பட்டனர். சில ரசிகர்கள் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விஜயின் சினிமா பயணத்தை வரவேற்கும் விதமாக ஆதி.ராஜாரம்  தனது உடலை தானம் செய்ய  நினைத்தார். அதன்படி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை டீன் ரவிக்குமாரிடம் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தை கொடுத்தார்.அதனை பெற்று கொண்ட டீன்  ரவிக்குமார், ஒரு கண் மூலம் இரண்டு பேருக்கு பார்வை தரலாம். ஒரு நபர் கண்கள் தானம் செய்தால் நான்கு பேருக்கு பார்வை கிடைக்கும். உடல் தானம் செய்பவர்கள் உடலை ஆறு மணி நேரத்திற்குள் கொடுத்து விட்டால் கண்,தோல் என பல உறுப்புகளை எடுத்து பலரது வாழ்வில் மகிழ்ச்சியும், மாற்றமும் உண்டாக்கலாம். அதற்கு நாம் காரணமாக இருக்க வேண்டும் என்றால்  உடல் தானம் செய்ய பலரும்  முன்வரவேண்டும். ஆதி.ராஜாராமின்  செயல் வரவேற்கத்தக்கது. இது போல் பலரும் உடல் தானம் செய்ய முன் வர வேண்டும் என பாராட்டினர். முதுநிலை உதவி பேராசிரியர் காயத்திரி, பட்டய மேற்படிப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட பலர்  உடனிருந்தனர்.

தஞ்சையில் உடல்  தானம் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி - நெகிழ்சியில் மருத்துவர்கள்...!

இது குறித்து ஆதி.ராஜாராம் கூறுகையில், நடிகர் விஜயின் எண்ணத்திற்கேற்ப மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். உடல் தானம் செய்தால் பலரது வாழ்வில் மலர்ச்சியை உண்டாக்கலாம். முக்கிய பொறுப்பில் உள்ள  நான்  உடல் தானம் செய்வதை பார்த்து விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிக சொந்தங்கள் பலரும் முன் வருவார்கள் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் விஜயின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாகவும்  உடல் தானம் செய்துள்ளேன் என்றார். 

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
Embed widget