மேலும் அறிய

மாற்றுப்பயிரில் முத்திரை பதிக்கும் விவசாயிகள்... கோடை சாகுபடியில் ஆர்வம்

டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய முதன்மைச் சாகுபடிகளைத் தொடர்ந்து, பம்ப் செட் நீர் வசதி உள்ள பகுதிகளில் கோடை காலச் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வேங்கராயன்குடிக்காட்டில் டிராக்டர்கள் மூலம் கோடை சாகுபடிக்காக வயலை உழும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாற்றுப்பயிர் சாகுபடியில் இப்பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான கோடை காலப் பயிர் சாகுபடிப் பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கியுள்ளன. இதன்படி தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காடு கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை சாகுபடிக்காக விளைநிலங்களை ஆயத்தப்படுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய முதன்மைச் சாகுபடிகளைத் தொடர்ந்து, பம்ப் செட் நீர் வசதி உள்ள பகுதிகளில் கோடை காலச் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தற்போது வேங்கராயன் குடிக்காடு பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களைச் கோடை சாகுபடிக்காக வயல்களை சீரமைப்பதில் தீவிரக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

விளைநிலங்களில் உள்ள முந்தைய பயிர்களின் தாள்களை அழித்து, மண்ணை வளப்படுத்துவதற்காக டிராக்டர்கள் மற்றும் சுழற்கலப்பைகள் மூலம் ஆழ உழவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கோடையில் ஆழமாக உழுவதால் மண்ணின் கீழ் அடுக்கு மேலே கொண்டு வரப்பட்டு, மண் பொலபொலப்புத் தன்மை அடைகிறது.

மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து, நுண்ணுயிரிகளின் பெருக்கம் சீராகிறது. முந்தைய பயிர்களின் வேர்களில் தங்கியிருக்கும் பூச்சிகளின் முட்டைகளும், கூட்டுப்புழுக்களும் வெயிலின் தாக்கத்தால் அழிக்கப்படுகின்றன. தற்போது தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி வயல்களை உழும் பணிகள் நடந்து வருகிறது.

குறைந்த நீர் தேவையும், அதிக லாபமும் தரக்கூடிய பயிர்களைப் பயிரிட வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளதால், இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு மாற்றுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் உளுந்து, பச்சைப்பயறு மற்றும் எள் போன்ற பயிர்களைப் பயிரிடப் பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டி நிலத்தை உழும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பலரும் நெல் சாகுபடியையும் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து வேங்கராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: "தற்போது உழவுப் பணிகளை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக விதைப்பு மற்றும் நாற்று நடும் பணிகளுக்குத் தயாராகி வருகிறோம். கோடை சாகுபடிக்குத் தேவையான தரமான சான்றளிக்கப்பட்ட விதைகள், அடி உரங்களான டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் யூரியா போன்றவை தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget