மேலும் அறிய

50 ஆண்டுகள் முன்பு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மீட்பு... ஏலத்தில் விடப்பட்டன

ட்டிடங்களில் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே பார்த்த போது அங்கு இருந்த பாத்திரங்கள் அனைத்தும் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பொருட்கள் என்பது தெரிய வந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு பூட்டிக்கிடந்த கட்டிடத்தில் இருந்து பல வகை பாத்திரங்கள் எடுக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி 1958-ம்ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் செடி, கொடிகள் மண்டிக்காணப்பட்ட 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 2 கட்டிடங்கள் பூட்டியே கிடந்தன. இதைப்பார்த்த மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி அதனை சுத்தம் செய்து கட்டிடத்தில் என்ன உள்ளது என பார்வையிட உத்தரவிட்டார்.


50 ஆண்டுகள் முன்பு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மீட்பு... ஏலத்தில் விடப்பட்டன

அதன் பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் செடி, கொடிகள், புதர்கள் அகற்றும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் அங்கிருந்த கட்டிடங்களில் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே பார்த்த போது அங்கு இருந்த பாத்திரங்கள் அனைத்தும் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பொருட்கள் என்பது தெரிய வந்தது. அனைத்து பாத்திரங்களும் செம்பு, பித்தளை, அலுமினியங்கள் போன்றவற்றால் ஆனது. அனைத்து பாத்திரங்களும் அதிக எடையிலும், மிகப்பெரிய அளவிலும் இருந்தது. தற்போதைய காலக்கட்டத்தில் இது போன்ற பாத்திரங்களை பார்ப்பது என்பது அரிது.

இந்த நிலையில் தமிழக அரசு தூய்மை திட்டம் 4.0 என்ற திட்டத்தை தொங்கி உள்ளது. இந்த திட்டத்தில் ஆஸ்பத்திரிகளில் பழமையான, உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் பொருட்கள், பாத்திரங்கள், மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள், அட்டைப்பெட்டிகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறும், நல்ல விலை போகும் பொருட்களை ஏலமிடுமாறும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பாத்திரங்கள் பழமையானதாகவும், அரிதானதாகவும் இருந்ததால் இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தொல்லியல் துறை அதிகாரிகள் வந்த ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பொருட்களில் அதிக விலை உடைய செம்பு பொருட்கள், அலுமினியம் மற்றும் பித்தளை பொருட்கள் என்று தெரிய வந்தது. மேலும் இவை அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை என தெரிய வந்தது.

இதையடுத்து அரிதாக காணப்படும் அண்டா, இட்லி கொப்பரை, பால்கேன், கடாய், அலுமினிய டிபன்கேரியர், தண்ணீர் ஊற்றும் குவளை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அருங்காட்சியகத்தில் வைப்பது எனவும், மீதமுள்ள பொருட்களை ஏலமிடவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பொருட்களை தவிர மீதமுள்ள பொருட்கள் ஏலமிடப்பட்டன. இதன் மூலம் ரூ.9 லட்சம் மருத்துவக்கல்லூரிக்கு கிடைத்துள்ளது என்று முதல்வர் பூவதி தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget