மேலும் அறிய
Advertisement
Crime: : சைடு லாக்கை லாவகமாக உடைத்து பைக் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்
குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தது வேளாங்கண்ணி காவல் துறையினர்.
வேளாங்கண்ணி அருகே இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை லாவகமாக உடைத்து திருடிச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியானது. குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை வேளாங்கண்ணி காவல் துறை கைது செய்தது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூரை சேர்ந்தவர் சத்தியசீலன். ஆட்டோ டிரைவரான இவர், தனது இருசக்கர வாகனத்தை வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அதிகாலை இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை லாவகமாக உடைத்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். மற்றொருவர் அருகில் கிடந்த ஸ்ப்ளெண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைக்கும் போது சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் துரத்தவே அவர்கள் மூன்று பேரும் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
மர்ம நபர்கள் குறித்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சத்தியசீலன் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஹரிஹரன், பட்டுக்கோட்டையை சேர்ந்த முகமது ரபிக், முத்துப்பேட்டையை சேர்ந்த பர்வீஸ் அகமது மூன்று பேரையும் வேளாங்கண்ணி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என நிறுவனத்தின் முன்பு நூற்றுகணக்கான விவசாயிகள்
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல், நாகை மாவட்டம் நாகூர், பனங்குடி, முட்டம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கத்திற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கர் நில எடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள் போராடி வந்தனர்.
இந்த நிலையில், பனங்குடி கிராமத்தில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் முன்பு நிலத்தின் உரிமையாளர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான CPCL நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், நில எடுப்புக்கு தவறாக நிர்ணயிக்கப்பட்ட விலையை ரத்து செய்ய வேண்டும், என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினார். போராட்டத்தில் நாகை திருவாரூர் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்பு புதிய நில எடுப்பு 2013 ஆம் ஆண்டு சட்டம் பிரிவை பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion