மேலும் அறிய

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஓஎன்ஜிசி விண்ணப்பம்

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை மீண்டும் ONGCக்கு அனுமதி கொடுத்துள்ளதா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கேட்டு திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திடம் ஓஎன்ஜிசி நிர்வாகம் விண்ணப்பம் அளித்தது. கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்து மன்னார்குடி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன், கச்சா எண்ணெய் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஓஎன்ஜிசிக்கு அனுமதிக்க கூடாது என கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் 2020ம் ஆண்டு முதல் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ONGC புதிய கிணறுகள் அமைக்கவும், ஏற்கனவே பேரழிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டு மூடப்பட்ட கிணறுகளை இனி செயல்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது காவிரி டெல்டாவில் பல இடங்களில் மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும் எரிவாயு எடுப்பதற்கும் மறைமுக முயற்சிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு திடீரென நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் பகுதியை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததாக செய்தி வெளிவந்தது. அதனை எதிர்த்து போராடிய போது தமிழக முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு அவ்வாறு அறிவிப்பு செய்தது தவறானது அதனை திரும்ப பெறுகிறோம் என்று அறிவித்தார். அதன்படி திரும்ப பெறப்பட்டது. 

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஓஎன்ஜிசி விண்ணப்பம்

இந்த நிலையில், தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுடியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக கிணறு தோண்டும் பணி நிறைவடையும் நிலையில் கட்டுக்கடங்காத எரிவாயு வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனால் பேராபத்து ஏற்பட்டு மோசமான நிலை ஏற்பட்டது. உடனடியாக அந்தக் கிணறு மக்கள் போராட்டத்தினால் தடை விதிக்கப்பட்டது. இக்கிணறு குறித்து 2014ல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கிணறு தோண்ட அனுமதி பெறவில்லை என்றும், அதனை அனுமதி இன்றி செயல்படுத்த கூடாது என நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்ந்து கடந்த  2021 ஆம் ஆண்டு மீண்டும் அந்த கிணற்றை திறப்பதற்கான நடவடிக்கையை ONGC மேற்கொண்ட போது மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் அக்கிணற்றுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கிணறு தோண்டப்பட்டால் பேராபத்து ஏற்படும் என்பதை எடுத்துரைக்கப்பட்டது. இதனை ONGC நிர்வாகம் ஏற்றுக்கொண்டு  நிரந்தரமாக மூடுவதற்கு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஓஎன்ஜிசி விண்ணப்பம்

இந்த நிலையில் திடீரென 29.07.2022  மாலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ வழிகாட்டுதலோடு பெரியகுடி கிணற்றிலிருந்து எரிவாயு எடுப்பதற்கு கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தற்போது தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக உள்ளது இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு 2016க்கு முன் அனுமதி பெற்ற கிணறுகள் தவிர்த்து காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளை திறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவன பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கச்சா எடுக்கும் கிணறுகள் மட்டுமே  அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஓஎன்ஜிசி நிர்வாகம் சார்பில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் எனவே அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. மாலை 4.30 மணியளவில் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் நிலத்தின் உரிமையாளர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 8 நபர்களை அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து இப்படி ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தது அப்படி என்றால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை மீண்டும் ONGCக்கு அனுமதி கொடுத்துள்ளதா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக தனது கொள்கை நிலையை அறிவிக்க முன்வர வேண்டும். ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் பணிகளை மேற்கொள்ளவோ அல்லது பேராபத்து ஏற்படும் என்கிற காரணத்தால் மூடப்பட்டுள்ள எரிவாயு கிணறுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோ அனுமதிக்க கூடாது என மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மன்னார்குடி வட்டாட்சியர் நடைபெற இருந்த கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பெரியகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசியால் கடந்த காலங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்த பின்னரே மீண்டும் கூட்டம் நடைபெறுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் மன்னார்குடி வட்டாட்சியர் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget