மேலும் அறிய
Advertisement
திருத்துறைப்பூண்டி அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளுக்கு திடீர் குடிநீர் நிறுத்தம்
திருவாரூர் நாகை மாவட்ட எல்லை பிரச்சினையால் சிக்கல். திருத்துறைப்பூண்டி அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளுக்கு திடீர் குடிநீர் நிறுத்தம்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல மருதூர் ஊராட்சி மேல சேத்தி கிராமத்தில் உள்ள 27 வீடுகளுக்கு கடந்த 23 ஆண்டுகளாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பொது குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது. இந்த குடிநீரானது நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வண்டுவாஞ்சேரி ஊராட்சி நால்ரோடு பகுதியில் உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் அமைப்பிலிருந்து விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம், வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மேலமருதூர் ஊராட்சி நிர்வாகம் மூலமாக குடிநீர் பைப்புகள் வீடுகள் தோறும் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகமும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மேல சேத்தி கிராமத்தில் வசிக்கும் 27 குடியிருப்பு வாசிகள் குடிநீரின்றி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மேலச்சேத்தி குடியிருப்பு பகுதியில் அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டதால், தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத அளவில் குடிநீர் வினியோகத்தை நிறுத்திவிட்டனர். இதனால் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறோம். உடனடியாக குடிநீர் விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தியதோடு, ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியதையும் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பாக வண்டுவாஞ்சேரி ஊராட்சித் நிர்வாகத்தினர் கூறியதாவது: மேல மருதூர் ஊராட்சி திருவாரூர் மாவட்டத்தின் முடிவில் உள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் விநியோகிக்கும் கட்டமைப்பு எங்களது வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் உள்ளது. ஏற்கனவே, மேல மருதூர் மேலசேத்தி கிராமத்தில் மூன்று பொது குடிநீர் குழாய் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்னறிவிப்பின்றி கூடுதலாக 27 குடிநீர் இணைப்புகளை அந்த ஊராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.
ஊராட்சிகளுக்கான நிதி குறைந்த அளவே தற்போது வந்து கொண்டிருக்கின்ற நிலையில், குடிநீர் வரியாக மாதத்துக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகிறோம். ஏற்கனவே மூன்று குழாய்கள் இருந்த இடத்தில் தற்போது கூடுதலாக 27 குடிநீர் குழாய்கள் இணைப்பு கொடுப்பதன் மூலம் குடிநீர் வரி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிதி சுமையை எங்களது ஊராட்சியால் தாங்க இயலாது. மேலும் எங்களது ஊராட்சி நாகை மாவட்டத்தை உள்ளடக்கி இருப்பதால் குடிநீர் விநியோகத்தை மேலமருதூர் ஊராட்சிக்கு கூடுதலாக வழங்குவது தொடர்பாகவும், அல்லது குடிநீர் வரியை குறைப்பதற்கும் நாகை மாவட்ட அதிகாரிகளிடம் பேச இயலவில்லை. எனவே குடிநீர் விநியோகத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக இரு மாவட்ட அதிகாரிகளும் கலந்து பேசி உரிய தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே தீர்வுக்கு வரும் என தெரிவித்தனர். இது தொடர்பாக மேலமருதூர் ஊராட்சி நிர்வாகத்தினரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட பொழுது தொலைபேசியை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion