மேலும் அறிய
Advertisement
சென்னையில் போராடும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா..? - அமைச்சர் ஐ.பெரியசாமி கூறிய பதில்
தூய்மை காவலர்களுக்கு தொப்பி அணிவித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் கோரிக்கை ஒரு சிலவற்றை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 317.20 லட்சம் மதிப்பீட்டில் 17,327 சதுர அடியில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிலையில் திருவாரூருக்கு ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி குடவாசலில் திறக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு அவர் தொப்பி அணிவித்தார். அப்போது தூய்மை காவலர்கள் அமைச்சரிடம் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கு அமைச்சர் இப்போது தான் 3500ல் இருந்து 5000 ரூபாய் உயர்த்திருக்கிறோம் என்று பதில் கூறினார்.
தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில்... சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் கோரிக்கை ஒரு சிலவற்றை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
க்ரைம்
க்ரைம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion