மேலும் அறிய

திருவாரூரில் தொடர் கனமழை - 40,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!

’’ஏக்கர் ஒன்றுக்கு 20,000 முதல் 25,000 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் சம்பா பயிர்கள் அழுகக்கூடிய நிலை உருவாகி உள்ளது’’

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு இதுவரை 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தற்போது 30 நாட்களில் இருந்து 50 நாட்கள் ஆன சம்பா பயிர்கள் அனைத்தும் 1 அடி தூரம் வளர்ந்து வந்துள்ளன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் தொடர் கனமழை - 40,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!
திருவாரூர், ஓடாச்சேரி, கொரடாச்சேரி, நன்னிலம், ஆண்டிபந்தல், கச்சனம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. உடனடியாக மழை நீரை வடிய வைத்து அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், அதுமட்டுமின்றி பாதிப்படைந்த பகுதிகளை வேளாண்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து இந்த மழை பெய்தால் சம்பா பயிர்கள் முழுவதுமாக அழுக கூடிய நிலை உருவாகும். இதுவரை ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம் ஏற்கனவே மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த இழப்பை விவசாயிகளால் தாங்க முடியாத நிலை உருவாகும், ஆகையால் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருவாரூரில் தொடர் கனமழை - 40,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!
 
தற்பொழுது வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைத்தவுடன் உடனடியாக உரம் கொடுக்க வேண்டும், ஆகையால் தமிழ்நாடு அரசு அனைத்து வேளாண் கிடங்குகளிலும் தட்டுப்பாடின்றி உரம் யூரியா உள்ளிட்ட இடு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் கடுமையான உரத் தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்து வருகின்றனர், ஆகையால் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். முழுவதுமாக பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை வேளாண்மைத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும், குறிப்பாக ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் எந்தெந்த இடங்களில் ஆற்றின் கரை பலவீனமாக உள்ளதோ அந்த இடத்தில் மணல் மூட்டைகளை கொண்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Thanjavur Power Shutdown (15.10.2026) : தஞ்சை மக்களே உஷார்! நாளை 8 மணி நேரம் மின்தடை… எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
Thanjavur Power Shutdown (15.10.2026) : தஞ்சை மக்களே உஷார்! நாளை 8 மணி நேரம் மின்தடை… எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
அதிரடித்த விவசாயிகளின் போராட்டம்... ஆடிப்போன அதிகாரிகள்: எங்கே தெரியுங்களா?
அதிரடித்த விவசாயிகளின் போராட்டம்... ஆடிப்போன அதிகாரிகள்: எங்கே தெரியுங்களா?
தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் வசூல் வேட்டை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.20,040 பறிமுதல்
தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் வசூல் வேட்டை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.20,040 பறிமுதல்
தஞ்சாவூர், பேராவூரணியில் சமுதாய வளைகாப்பு விழா
தஞ்சாவூர், பேராவூரணியில் சமுதாய வளைகாப்பு விழா

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
Embed widget