மேலும் அறிய
Advertisement
மிக்ஜாம் பேரிடர் : சென்னைக்கு நிவாரண பொருட்கள்.. லாரிகளை கொடியசைத்து வழியனுப்பிய ஆட்சியர்
திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் ஒரு லாரியிலும் இரண்டு லாரி மூலம் திருவாரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னைக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய லாரிகளை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தார்
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னையில் வரலாறு காணாத கன மழை பெய்த காரணத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பிற மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நிவாரண பொருட்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், பேரளம் குடவாசல், நீடாமங்கலம், கொரடாச்சேரி, முத்துப்பேட்டை, வலங்கைமான் ஆகிய ஏழு பேரூராட்சிகள் சார்பில் சுமார் 8 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் ஒரு லாரியிலும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சி மற்றும் திருவாரூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உணவு பாதுகாப்பு துறை ஆகியவற்றின் சார்பில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் ஒரு லாரியிலும் நிவாரண பொருட்கள் ஒரு லாரியிலும் என இரண்டு லாரி மூலம் திருவாரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறிப்பாக அரிசி, பிஸ்கட், வாட்டர் பாட்டில், பிரெட் தலையணை பாய் போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.குறிப்பாக 20,000 லிட்டர் வாட்டர் பாட்டில்கள் குறிப்பாக இந்த நிவாரண பொருட்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிவாரண பொருட்கள் அடங்கிய இந்த லாரியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளருமான பூண்டி கலைவாணன் தனது சொந்த நிதி 10 லட்சம் மதிப்பில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை மூன்று லாரிகள் மூலமாக அனுப்பி வைத்தார் அரிசி காய்கறி உள்ளிட்ட பொருள்களை 3000 பைகள் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதேபோன்று கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் 5 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை சென்னைக்கு கொண்டு சென்று அமைச்சர் டி ஆர் பி ராஜா மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். இதேபோன்று பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion