மேலும் அறிய

திருவாரூர்: கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை..

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக  சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் மழை பெய்து வருவதால் பயிர்கள் அனைத்தும்  மழை நீரில் மூழ்கி வருகிறது

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மாவட்டம் முழுவதும் 24 மணிநேரத்தில் 504 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது
 
திருவாரூர் தஞ்சாவூர் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளார்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை முதல் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மேலும் திருச்செந்தூர் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

திருவாரூர்: கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை..
இந்த நிலையில் கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என நேற்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை திருவாரூர் மாவட்டம் முழுவதும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார் ஆகையால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி நன்னிலம் குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில்  மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேலும் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி வருவதால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூர்: கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை..
தற்போது திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக  சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் மழை பெய்து வருவதால் பயிர்கள் அனைத்தும்  மழை நீரில் மூழ்கி வருகிறது ஆகையால் மாவட்ட நிர்வாகம் அனைத்து பகுதிகளிலும் வேளாண் துறை பொதுப்பணித் துறை ஊழியர்களை கொண்டு விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 103.3 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது நன்னிலத்தில் 94.2 மில்லி மீட்டரும் குடவாசலில் 37.6 மில்லி மீட்டரும் மன்னார்குடியில் 48.6 மில்லி மீட்டரும் திருத்துறைப்பூண்டியில் 46.1 மில்லி மீட்டரும் முத்துப்பேட்டையில் 49.6 மில்லி மீட்டரும் பாண்டவையாற்றில் 59.6 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget