மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
வீடு கட்டப்பட்டு 2 வருடங்களுக்குள் நீர்க்கசிவு - கொத்தனாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு
வீடு கட்டப்பட்டு 2 வருடங்களுக்குள் மேற்கூரை காரை பெயர்ந்து நீர்க்கசிவு ஏற்பட்டது குறித்த வழக்கில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு.
திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட கொடிக்கால்பாளையம் மேலத் தெருவை சேர்ந்தவர் ஹபீப் ரஹ்மான். இவர் வெளிநாட்டில் வேலை ஒட்டுனராக பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27. 07.2017 அன்று சொந்த வீடு கட்டுவதற்காக அடியக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சாதிக் அலி என்பவரிடம் வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் சதுர அடிக்கு 1600 வீதம் 1007.5 சதுர அடிக்கு 16 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் தருவது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சாதிக் அலி பகுதி பகுதியாக மொத்தமாக 20 லட்சம் ரூபாயை ஹபீப் ரஹ்மானிடம் இருந்து பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை விட மூன்று லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை சாதிக் அலி பெற்றுள்ளார். மேலும் ஒப்பந்தப்படி தரமான பொருட்களை வைத்து வீடு கட்டி கொடுக்காமல் தரமற்ற பொருட்களை வைத்து வீடு கட்டிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் வீடு கட்டிக் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்குள் வீட்டின் மேற்பகுதி உட்புற வெளிப்புறச் சுவர்களில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கட்டிடத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஹபீப் ரஹ்மானின் மனைவி ஹனிஷ் பாத்திமா இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு புகார்தாரர் தனது வீட்டின் மேற்கூறையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதை நிரூபித்துள்ளார் என இந்த ஆணையும் கருதுகிறது. கட்டிடம் கட்டிக் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்குள் அதில் நீர்க்கசிவு ஏற்பட்டதை சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது.
மேலும் கட்டிடத்தின் உறுதித் தன்மையை குறைக்கும் வண்ணம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் புகார்தாரரின் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் சென்ட்ரிங்கில் நீர் கோர்த்து கசிவு ஏற்பட்டுள்ளதால் வருங்காலத்தில் எந்த நேரத்திலும் கட்டிடம் விழுந்து இடிந்து விடும் அபாயகரமான வாய்ப்புள்ளதாக உள்ளதாக இந்த ஆணையம் கருதுகிறது.
எனவே எதிர்தரப்பினர் கட்டிடத்தின் சென்ட்ரிங்கில் இருந்து ஏற்பட்ட நீர்க்கசிவை சரி செய்ய ஒரு லட்சம் ரூபாயும் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாயும் வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தீர்ப்பளித்த நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் இந்த பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ஒன்பது சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion