மேலும் அறிய

காப்பீட்டு தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் - ரூ. 19 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்காக விதிக்கப்பட்ட இழப்பீடுத் தொகை 1 லட்சம், வழக்கு செலவு தொகையாகு 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.

இறப்பிற்கான காப்பீட்டுத் தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் ரூ.19 லட்சத்து 47 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் எடையூர் புதுத்தெருவைச் சேர்ந்த 53 வயதான ஜெயக்குமார் என்பவர் எடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் உள்ள ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 15 லட்சத்திற்கு காப்பீடு செய்துள்ளார். இதற்கு முதல் வருடத்திற்கான பிரிமீயம் தொகையான 1,09,104 ரூபாய் ஜிஎஸ்டியுடன் சேர்த்து  செலுத்தியுள்ளார். இந்த காப்பீட்டின் முதிர்வு தேதி 25/3/2036 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி இரவு 12 மணிக்கு ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தேன்மொழி திருத்துறைப்பூண்டி ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது கணவர் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் இறப்பிற்கான காப்பீட்டுத் தொகையான 18 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் தனக்கு வழங்க வேண்டி விண்ணப்பித்துள்ளார்.

காப்பீட்டு தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் - ரூ. 19 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதற்கு ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஜெயக்குமாருக்கு ஏற்கனவே உடல் உபாதை இருந்து அதற்கான சிகிச்சை பெற்றுள்ளதாக கூறி காப்பீடு தொகையை வழங்க மறுத்துள்ளது. இதனையடுத்து தேன்மொழி இது குறித்து உரிய ஆண்களுடன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இறப்பிற்கான இன்சூரன்ஸ் தொகை மற்றும் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி சேவை குறைபாடு செய்வதற்காக ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி கடந்த 07.04.2022ல் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு ஜெயக்குமாருக்கு ஏற்கனவே உடல் பாதைகள் இருந்ததாகவும் அதற்கு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் நகல் ஆவணமாக இருப்பதாலும், மேலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் இல்லை எனவும் தெரிவித்ததுடன் தேன்மொழிக்கு ஜெயக்குமார் இறப்பிற்கான இழப்பீடு தொகையான 18 லட்சத்து 37,500 ரூபாயை ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் தேன்மொழியின் விண்ணப்பத்தை நிராகரித்த தேதியான  29.12.2021 ல்  இருந்து பணம் செலுத்தும் வரை 12 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும்  எனவும், மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் ஆக மொத்தம் 19 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை ஒரு மாத காலத்திற்கு வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

காப்பீட்டு தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் - ரூ. 19 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்காக விதிக்கப்பட்ட இழப்பீடுத் தொகை ஒரு லட்ச ரூபாய் மற்றும் வழக்கு செலவு தொகையாகு 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க தவறும் பட்சத்தில் பணம் வழங்கும் தேதி வரை 6% வருட  வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Embed widget