மேலும் அறிய
Advertisement
திருவாரூர்: அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு
’’பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் வாக்குறுதி’’
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள பொற்காலகுடி கிராமத்தை சேர்ந்தவர் தவமணி (55). இவருக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார். அவர் வெளியூரில் திருமணமாகி கணவரோடு வாழ்ந்து வருகிறார். கூலித் தொழிலாளியான தவமணி பல்வேறு கூலி வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக திருமண நிகழ்வில் பங்கேற்று பாத்திரம் கழுவும் வேலைக்குச் சென்ற தவமணி மாடிப்படியில் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து கடந்த 13ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தவமணி அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடுப்பு எலும்பின் ஜவ்வு சேதமாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று தவமணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் என மருத்துவர்கள் தவமணியின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் தவமணிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குக்கு மருத்துவர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்து உள்ளனர். மயக்க மருந்து கொடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் மருத்துவர்கள் அவரை வெளியே அழைத்து வந்து மீண்டும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த தவமணியின் உறவினர்கள் ஏன் அறுவை சிகிச்சை செய்யவில்லை என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு மருத்துவர்கள் அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனால் மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 5 நிமிடம் கழித்து தவமணி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட தவமணியின் உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்த திருவாரூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பரமானந்தம் தலைமையில் காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் தவமணி உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினரிடம் தவமணியின் உறவினர்கள் தெரிவித்தனர். நீண்ட நேரம் ஆகியும் வாக்குவாதம் நீடித்ததால் தவமணியின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதன் பின்னர் உடலை வழங்குகிறோம். மருத்துவர்கள் செய்திருந்தால் தவறு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் தவமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையில் தவமணியின் உறவினர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் கேட்டபோது நாங்கள் ஏற்கனவே அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகவும் இதய நோய் பிரச்சினை இருப்பதாகவும் தெரிவித்து விட்டு தான் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றோம். அதற்கு ஒப்புதல் அளித்து தவமணியின் உறவினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். எங்கள் மீது எந்த தவறும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 நிமிடத்தில் பெண்மணி ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion