மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் வரும் 12 ஆம் தேதி ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்...!
633 இடங்களில் 63,200 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு கோவாக்ஸின், கோவிஷுல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் மூலமாக வழங்கி பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ் நாட்டில் மூன்றாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அதிவேகமாக தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. அதனை முன்னிட்டு வருகிற 12-ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 63 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் எதிர்வரும் 12ஆம் தேதியன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள 633 இடங்களில் 63,200 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. “கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது,
கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துகொள்ள அவசியம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதனை அனைத்து மக்களிடம் எடுத்துசென்று அதன் மூலம் முழுமையான பயனை மக்களிடத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக எடுத்துக்கூறி செயலாற்றி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அந்தவகையில், எதிர்வரும் 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவாரூர் மாவட்டத்தில் 633 இடங்களில் 63,200 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் இதுநாள்வரை தடுப்பூசி எடுத்துகொள்ளதவர்கள், உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி எடுத்துகொண்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதனை கருத்தில்கொண்டு நடைபெறும் இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்வில் முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோடி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்ட அரசு அனைத்துறை அலுவலர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களை சார்ந்த தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion