மேலும் அறிய

தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்ரியாவுக்கு கொரோனா தொற்று

சில நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, இவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று இருப்பது பிற்பகல் உறுதி செய்யப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 497  பேர் வீடு திரும்பியுள்ளனர்.  ஒருவர் இறந்துள்ளார். இது வரை 85970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இரண்டாவது அலை பரவலாக பரவியதையடுத்து, தற்போது மூன்றாவது அலை பரவும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் பொது மக்கள் பல்வேறு இடையூர்களுக்கு ஆளாகினர். கொரோனா தொற்று நோயை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. மக்களை காப்பாற்றும் விதமாக தடுப்பு ஊசிகள் செலுத்துவதற்கு முகாம் அமைத்து, வலியுறுத்தப்படுகிறது.

இதனால் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், நேற்று தஞ்சை மாவட்டத்தில் ஆயிரத்தை தாண்டியத.  ஆனால் தமிழ்நாட்டிலுள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகம், கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. 25ஆம் தேதி வரை 1104 பேர் பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. 497  பேர் வீடு திரும்பியுள்ளனர்.  ஒருவர் இறந்துள்ளார். இது வரை 85970 பேர் பாதிக்கப்பட்டு,  78772 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இது வரை 1019 பேர் இறந்துள்ளனர். மருத்துவமனைகளிலும், தனிமையிலும் 6179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்ரியாவுக்கு கொரோனா தொற்று

மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்,வாகனஒட்டிகள், பாதசாரிகள், வணிக நிறுவனங்களில் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்துள்ளார்கள் என ஆய்வு செய்து, அபராதம் விதித்து, எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. தினந்தோறும் சுகாதாரத்துறையினர், தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு  உள்ளிட்ட அனைத்து தாலுக்காவிலும், காலை முதல் இரவு வரை கொரோனா தொற்று தடுப்பு குறித்தும், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இவருக்கு சில நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, இவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று இருப்பது பிற்பகல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்ரியாவுக்கு கொரோனா தொற்று

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.  கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.  பொது மக்கள், கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஒதவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்  மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget