தஞ்சை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ; மொத்த வாக்காளர்கள் எத்தனை பேர்..?
வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தீபக் ஜேக்கப் வெளியிட்டார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 9,87,478 பேரும், பெண் வாக்காளர்கள் 10,41,827 பேரும், இதர பாலினத்தவர்கள் 166 பேரும் என மொத்த வாக்காளர்கள் 20,29,471 பேர் உள்ளனர்.
திருவிடைமருதூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 129218, பெண் வாக்காளர்கள் 132358, மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் 12 ஆக கூடுதல் வாக்காளர்கள் 261588, கும்பகோணம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 129737, பெண் வாக்காளர்கள் 136736, மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் 14 ஆக கூடுதல் வாக்காளர்கள் 266487. இதேபோல் பாபநாசம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 126848, பெண் வாக்காளர்கள் 132703, மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் 20, ஆக கூடுதல் வாக்காளர்கள் 259571, திருவையாறு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 130397, பெண் வாக்காளர்கள் 136791, மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் 17, ஆக கூடுதல் வாக்காளர்கள் 267205, தஞ்சாவூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 130865, பெண் வாக்காளர்கள் 142798, மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் 65, ஆக கூடுதல் வாக்காளர்கள் 273728.
ஒரத்தநாடு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 118843, பெண் வாக்காளர்கள் 125839, மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் 3 ஆக கூடுதல் வாக்காளர்கள் 244685. பட்டுக்கோட்டை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 116304, பெண் வாக்காளர்கள் 126372, மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் 25 ஆக கூடுதல் வாக்காளர்கள் 242701, பேராவூரணி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 105266, பெண் வாக்காளர்கள் 108230, மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் 10, ஆக கூடுதல் வாக்காளர்கள் 213506. இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 9,87,478 நபர்களும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 10,41,827 நபர்களும், இதர பாலினத்தவர்கள் 166 நபர்களும் ஆக கூடுதலாக மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 20,29,471 நபர்கள் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்பொழுது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதுகுறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறுகையில், வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. மேலும் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டணமின்றி விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. வரும் 25-ம் தேதி 14-வது தேசிய வாக்காளர் தினம் மாவட்ட தலைமையிடம் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கொண்டாடப்படவுள்ளது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்திகொண்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா நுாற்றாண்டு அரங்கம் வரை மாணவர்களை கொண்டு பேரணி நடக்கவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.