மேலும் அறிய

பாசனப் பொறியியலில் உன்னத எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சை புது ஆறு!

தஞ்சை பெரிய கோயிலை ஒட்டி இந்த புது ஆறு 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்கிறது.

ஆறுகள் இயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஆனால் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக்கால்வாய் செயற்கையாக உருவாக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலை ஒட்டி இந்த புது ஆறு 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்கிறது.

கட்டிடக் கலையின் உன்னதம் தஞ்சை பெரிய கோயில் என்றால், பாசனப் பொறியியலின் உன்னதம் இந்த புது ஆறு என்றால் மிகையில்லை. இது விவசாயத்துக்காக மனிதனால் வெட்டப்பட்டது. ஒரு சொட்டு நீரும் அனுமதி இல்லாமல் இதில் கலக்க முடியாது என்பதும் இதன் பெருமை.

தமிழகத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்டபோது தஞ்சை மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியாக இருந்தவைதான் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வரையிலான சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலங்கள். மழை பெய்தால் மட்டுமே இங்கு விவசாயம் நடக்கும். மழை பொய்த்தால் விவசாயம் நடக்காது. இப்பகுதிகள் வளம் பெற வேண்டியும், இந்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைத்து சாகுபடிகள் நடக்க வேண்டும் என்பதற்காகவும் வெட்டப்பட்டதுதான் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக்கால்வாய். இந்த புது ஆற்றை அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராணுவப் பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ் என்பவர் வடிவமைத்தார்.

கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரையிலான 149 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றில், 109 கி.மீ. நீளம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. மீதம் உள்ளவை சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய அரசால் வெட்டப்பட்டவை. இந்த ‘ஏ’ கால்வாயிலிருந்து பி, சி, டி, இ என வெட்டப்பட்ட 337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 28.08.1934-ல் இந்த புது ஆறு (கல்லணைக்கால்வாய்) திறக்கப்பட்டது. 88 வயது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கட்டிடக் கலையின் உன்னதம் தஞ்சை பெரிய கோயில் என்றால், பாசனப் பொறியியலின் உன்னதம் இந்த புது ஆறு என்றால் மிகையில்லை. இது விவசாயத்துக்காக மனிதனால் வெட்டப்பட்டது. ஒரு சொட்டு நீரும் அனுமதி இல்லாமல் இதில் கலக்க முடியாது என்பதும் இதன் பெருமை.

இந்த ஆற்றில் எங்குமே கழிவுநீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்க முடியாத வகையில் ஆற்றின் குறுக்கே சைபன் எனப்படும் சுரங்கங்கள், மேலே சூப்பர் பேஸேஜஸ் எனப்படும் மேல்நிலை கால்வாய்களும்,  பெருவெள்ளக் காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற அக்யுடக்ட் எனப்படும் கால்வாய் சுரங்கங்களும், தண்ணீரின் விசையை சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் டிராப் எனப்படும் நீரொழுங்கிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்த ஆறு, முழுக்க முழுக்க பாசனத்துக்காக மட்டுமே வெட்டப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால், இந்த ஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்லும்.

கடைமடை வரை தண்ணீரை தடையில்லாமல் கொண்டு செல்லும் வகையில் கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அடி உயரம் கொண்ட நிலப் பகுதிகளை வரைகோடுகள் மூலம் துல்லியமாக இணைத்து அதற்கேற்ப மேடான பகுதிகளை வெட்டி உருவாக்கப்பட்ட சமஉயர் கால்வாய் இது என்கின்றனர் பொறியாளர்கள்.

தஞ்சை பெரிய கோயிலை ஒட்டி இந்த புது ஆறு 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்லும் என்பதே இதற்கு சாட்சி. மேலே பார்ப்பதற்கு நீரோட்டம் சலனமின்றி தெரிந்தாலும் அடி நீரோட்டம் அதிவேகமாக இருக்கும். அது மேலே தெரிவதைவிட கீழே மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். செயற்கையாக உருவாக்கப்பட்டாலும் கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாய்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget