மேலும் அறிய

தஞ்சையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்

’’சாலை விரிவாக்கம் என்ற பெயரில் குடிநீர் குழாயை, எந்த விதமான முன்னேற்பாடுகள் செய்யாமல் உடைத்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டால், நிர்வாகத்திடம் கேட்க சொல்கிறார்கள்’’ 

தஞ்சை மாவட்டம், நீலகிரி ஊராட்சி, வள்ளலார் நகர் பகுதியில் சுமார் நுாற்றக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தினக்கூலியாக இருப்பதால், காலையில் நகரிலுள்ள குடிநீர் குழாயில் வரும் குடிநீர் பிடித்து வைத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வள்ளலார் நகரில் உள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. அப்போது, சாலையின் கீழ் செல்லும் குடிநீர் குழாயினை, சாலை வேலை செய்பவர்கள் ராட்ஷத இயந்திரத்தை கொண்டு வேலை செய்யும் போது, உடைத்து விட்டனர். அப்போது, அங்குள்ள பொது மக்கள், இது குறித்து கேட்ட போது, சாலையை சீர் செய்தவுடன் குடிநீர் குழாயினை சீர் செய்து தருகின்றோம். அதுவரை குடிநீருக்கு மாற்று வழி செய்த தரப்படும் என்றனர். கடந்த ஒரு மாதமாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வந்தது.  ஆனாலும் அன்றாடம் தேவையான குடிநீரை பலகிலோ மீட்டர் துாரத்திற்கு சென்று பிடித்து வந்து வைத்து கொண்டும், வசதி படைத்தவர்கள் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

தஞ்சையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்

இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது, எந்த விதமான நடவடிக்கையும் இல்லாமல் அலட்சியமாக இருந்து வந்தனர்.  இதனால் ஆத்திரமடைந்ததால், அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அனைவரும், அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்க கோரி, காலி குடங்களுடன், அதே பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், தகவலறிந்து அங்கு வந்த மருத்துவக்கல்லூரி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்

 இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் குடிநீர் குழாயை, எந்த விதமான முன்னேற்பாடுகள் செய்யாமல் உடைத்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டால், நிர்வாகத்திடம் கேட்க சொல்கிறார்கள்.  அதிகாரிகளின் அலட்சியத்தால், பல கிலோ மீட்டர் துாரம் சென்று, குடிநீருக்கும் மற்ற பயன்பாட்டிற்கும் தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிதாய்மார்கள், குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். பல முறை புகார் அளித்தும் எங்களுக்கு குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் வசதி செய்து தராவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget