Thanjavur Power Shutdown (21.6.25): தஞ்சை மக்களே உஷாரு...மின் தடைங்க... உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா?
Thanjavur Power Shutdown: பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும்.

Thanjavur Power Shutdown: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் வரும் 21.06.25 நடக்கிறது. அதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
இந்த பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி/10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது, பல்வேறு டிரான்ஸ்பார்மகளை பழுது பார்ப்பது மற்றும் பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் வரும் 21ம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உதவிசெயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் வரும் 21ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே அந்த பகுதியில் இருந்து மின்சாரம் பெறும் கரந்தை, பள்ளியக்ரகாரம், பள்ளியேறி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார் நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இபி காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 21ம் தேதி காலை மணி 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எனவே வரும் 21ம் தேதி மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் தங்களின் வீட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் 21ம் தேதி ஏற்படும் அசௌகரியங்களை பொறுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





















