Thanjavur power cut: தஞ்சாவூரில் நாளை 6 மணி நேரம் பவர் கட் - உங்க பகுதியும் இருக்கானு செக் பண்ணிக்கோங்க மக்களே
Thanjavur Power Cut (2-12-2025): தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 2, 2025, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் முற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
மணிமண்டபம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் மின் வழித்தடத்தில் அருளானந்தநகர், பிலோமினா நகர், காத்தூண்நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர் பகுதிகளிலும், மேரீஸ்கார்னர் மின் வழித்தடத்தில் திருச்சி ரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம்
மங்களபுரம் சுற்றியுள்ள கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளிலும், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மின் வழித்தடத்தில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரிநகர், என்.எஸ். போஸ்நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார் நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி நடராஜபுரம் தெற்கு காலனி
நிர்மலா நகர் மின் வழித்தடத்தில் உள்ள புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, எலிசாநகர், முல்லை, மருதம், நெய்தல் நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், நட்சத்திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர். நகர் பகுதிகளிலும், யாகப்பாநகர் மின் வழித்தடத்தில் யாகப்பாநகர், அருளானந்தம்மாள் நகர், குழந்தையேசு கோவில், பிஷப் காம்ப்ளக்ஸ்
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.





















