மேலும் அறிய

மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க தஞ்சையில் இடம் தேடப்பட்டு வருகிறது: தொல்லியல் துறை இணை இயக்குனர் தகவல்

தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேடப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணை இயக்குநர் ஆர். சிவானந்தம் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேடப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணை இயக்குநர் ஆர். சிவானந்தம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்தும் முதுகலை பட்டப்படிப்பு படித்தும் வரும் மாணவர்களுக்கான களப் பயிற்சியை தொடக்கி வைத்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு நிறைவுக்கு பின்பு அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இதேபோல, கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலான இடம் தேடப்படுகிறது. தமிழகத்தில் தற்போது கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல, கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர் மாவட்டம்), பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), துலுக்கர்பட்டி (திருநெல்வேலி மாவட்டம்), வெம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்), பூதிநத்தம் (தருமபுரி மாவட்டம்), கீழ்நமண்டி (திருவண்ணாமலை மாவட்டம்) உள்பட 8 இடங்களில் அகழாய்வு பணி நடைபெறுகிறது.

தற்போது மக்களிடம் தொல்லியல் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், தொல்லியல் பட்டப்படிப்புகள் படிப்பதற்கு நிறைய இளைஞர்கள் ஆர்வத்துடன் முன் வருகின்றனர். இதையொட்டி, தொல்லியல், கல்வெட்டியல், பாரம்பரிய மேலாண்மை மற்றும் அருங்காட்சியகம் ஆகிய 3 பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்புகளைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்தி வருகிறது.

மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க தஞ்சையில் இடம் தேடப்பட்டு வருகிறது: தொல்லியல் துறை இணை இயக்குனர் தகவல்

இதில், படிக்கும் மாணவர்களுக்கு தஞ்சாவூர் மணிமண்டபத்திலுள்ள அகழ்வைப்பகத்தில் 10 நாள்களுக்கு களப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், மாணவர்களுக்கு வரலாற்று நினைவு சின்னங்கள், பழங்கால கோயில்களைப் பாதுகாத்தல், புதுப்பித்தல் உள்ளிட்டவை தொடர்பாக தொடர்புடைய வல்லுநர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பின்னர் அறிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,  கடல் பல கடந்து, சமர் பல வென்று இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பெரும் நிலப்பரப்பை பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியது சோழப்பேரரசு.

தமிழரின் கலை, இசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, கைவினை, நடனம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் சோழர் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்து பாரெங்கும் பரவின. தமிழரின் பண்பாடும், சிற்பக்கலைகளும் உலக பெருமை வாய்ந்தவை. உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும், அக்காலை கலைப் பொருட்கள், நினைவுச்சினங்களைப் பாதுகாக்கவும் தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை! 14 வயது தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! வலையத்தில் 4 பேர்!
பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை! 14 வயது தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! வலையத்தில் 4 பேர்!
இனி இது கட்டாயம்! மார்ச் 10 முதல் ஐ.டி ஊழியரகளுக்கு ஷாக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
இனி இது கட்டாயம்! மார்ச் 10 முதல் ஐ.டி ஊழியரகளுக்கு ஷாக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
SpaceX Starship Explodes: நடுவானில் வெடித்துச்சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. விண்ணில் தோன்றிய தீப்பிழம்புகளின் வீடியோ...
நடுவானில் வெடித்துச்சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. விண்ணில் தோன்றிய தீப்பிழம்புகளின் வீடியோ...
Chennai Bengaluru NH: மூனே மாசம் தான்.. சென்னை டூ பெங்களூரு ரெண்டே மணி நேரம் - 36 க்ரீன் எக்ஸ்பிரஸ் சாலைகள்
Chennai Bengaluru NH: மூனே மாசம் தான்.. சென்னை டூ பெங்களூரு ரெண்டே மணி நேரம் - 36 க்ரீன் எக்ஸ்பிரஸ் சாலைகள்
Embed widget