மேலும் அறிய

“மாட்டை அடக்கினால் 250 ரூபாய் தாரேன்” அநியாயமாக பறிபோன உயிர்

எனது மகனிடம் மாட்டை அடக்கினால், 250 ரூபாய் தருகிறேன் என கூறியுள்ளார். இதற்கு ஆசைப்பட்டு காளையை அடக்க சென்றபோது மாடு முட்டி என் மகன் இறந்துவிட்டார்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் அரசு பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளரால்தான் தன் மகன் உயிரிழந்தான் என்று பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தஞ்சை அருகே வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ். இவரது மனைவி மேரி கிரேஸி. இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் மூத்த மகன் திரண் பெணடிக்ட். வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் திரண் பெணடிக்ட் வீட்டுக்கு திரும்பி உள்ளார். வல்லம் அருகில் அற்புதாபுரம் சாலையில் உள்ள ஒரு பண்ணை அருகே கட்டி வைக்கப்பட்டு இருந்த ஜல்லிக்கட்டு காளையை திரண் பெணடிக்ட் பிடிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. 

அப்போது திடீரென ஜல்லிக்கட்டு காளை திரண் பெணடிக்ட் நெஞ்சில் குத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் நிலைகுலைந்து சரிந்து கீழே  விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் திரண் பெணடிக்ட்டை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வல்லம் திரண் பெணடிக்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மாணவரின் பெற்றோர் வல்லம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர் மாட்டை அடக்கினால் ரூ.250 பணம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் என் மகன் மாட்டின் அருகே சென்றுள்ளார். இதில் மாடு முட்டியதில் என் மகன் இறந்து விட்டார். எனவே மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு இறந்த மாணவரின் பெற்றோர் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "அற்புதாபுரம் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் மாட்டிற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில், எனது மகனிடம் மாட்டை அடக்கினால், 250 ரூபாய் தருகிறேன் என கூறியுள்ளார். இதற்கு ஆசைப்பட்டு காளையை அடக்க சென்றபோது மாடு முட்டி என் மகன் இறந்துவிட்டார். என் மகனின் உயிரிழப்பிற்கு காரணமான ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். மேலும் அரசு எங்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
Trichy Power shutdown : திருச்சியில் நாளை(19.07.25) கரண்ட் இருக்காது.. லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
7.5 கோடி! கனவிலும் நினைச்சு பார்க்க முடியாத ரேட்.. இந்தியாவின் டாப் EV கார் இவங்க தான்...
மின்சார வாகனத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கனுமா? அரசே நடத்தும் பயிற்சி முகாம் - எங்கே? எப்போது?
மின்சார வாகனத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கனுமா? அரசே நடத்தும் பயிற்சி முகாம் - எங்கே? எப்போது?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சருக்கு தலைவலி தரும் காவல்துறை.. அடுத்த நடவடிக்கை என்ன?
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
Joe Root: காலீஸ், டிராவிட், பாண்டிங் எல்லாம் ஓரம்போ.. வரலாறு படைக்கப்போகும் ஜோ ரூட்!
கல்லி கிரிக்கெட்டில் Baby Over இருக்கு... அப்போ சர்வதேச கிரிக்கெட்டிலும் இருக்கு அது எப்படி திமிங்கலம்?
கல்லி கிரிக்கெட்டில் Baby Over இருக்கு... அப்போ சர்வதேச கிரிக்கெட்டிலும் இருக்கு அது எப்படி திமிங்கலம்?
Embed widget