மேலும் அறிய

'ராஜராஜ சோழன் எங்க சாதி'... ஆண்டுதோறும் அட்ராசிட்டி... எப்போ திருந்துவீங்க..?

ராஜராஜசோழன் எங்கள் சாதி என உரிமைக் கொண்டாடிக் கொண்டு போஸ்டர் அடித்து அவரது சிலைக்கு மாலை அணிவிக்க ஆர்ப்பாட்டமாக வந்து நாங்களும் உள்ளோம் என்று ஆண்டுக்கு ஒருமுறை அட்ராசிட்டி காட்டுகின்றனர்.

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழாவானது நேற்றும் இன்றும் வெகு உற்சாகமாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு முதல் அரசே ஏற்று சதய விழாவை நடத்துகிறது. இது ராஜராஜ சோழனுக்கு பெருமை சேர்க்கிறது என்றால்... ஒவ்வொரு சதய விழாவின் போதும் பல்வேறு சாதி அமைப்புகள், ராஜராஜசோழன் எங்கள் சாதி என உரிமைக் கொண்டாடிக் கொண்டு போஸ்டர் அடித்து அவரது சிலைக்கு மாலை அணிவிக்க ஆர்ப்பாட்டமாக வந்து நாங்களும் உள்ளோம் என்று ஆண்டுக்கு ஒருமுறை அட்ராசிட்டி காட்டுகின்றனர்.

மாமன்னன் ராஜராஜ சோழன் கி.பி 985-ல் சோழப் பெருமன்னனாக அரியணையில் அமர்ந்தார். பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கி ராஜகேசரி என்ற பட்டம் பெற்று கி.பி 1014 வரை ஆட்சி புரிந்தார் என்று வரலாறும், கல்வெட்டுகள் தகவல்களை பகிர்கின்றன. தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்தவர். போர் களம் பல கண்டு வெற்றி வாகையை மட்டும் தனக்கே உரிதாக்கிய அற்புதமான சோழ மன்னர் என்று ராஜராஜ சோழனை அனைவரும் கொண்டாடுகின்றனர்.

ராஜராஜ சோழன் எங்க சாதி'... ஆண்டுதோறும் அட்ராசிட்டி... எப்போ திருந்துவீங்க..?

ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழன் முடிசூடிய நாள், ஆண்டுதோறும் பெரிய கோயிலில் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்தாண்டு முதல் அரசு விழாவாக நடந்து வருகிறது. இந்த ஆண்டும் சதயவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் எப்போதும் போல் இந்தாண்டும், இணையதளத்தில் ராஜராஜ சோழன் குறித்து சாதிய அமைப்புகள் 'ராஜராஜ சோழன் எங்க சாதி'  என வரிந்து கட்டிக் கொட்டு தங்கள் சாதி பெயரையும் இணைத்த போஸ்டர்களை உலாவ விட்டனர். அதுமட்டுமா? தஞ்சை நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக பழைய பேருந்து நிலைய பகுதியில் உள்ள சுவர்கள் முழுவதும் சாதிய அமைப்புகளின் சதய விழா அழைப்பு போஸ்டர்கள்தான் நிரம்பி இருந்தன. ஒவ்வொன்றிலும் ஸ்ரீ கள்ளச்சோழனை தரிசிக்க வாருங்கள், கரை வழிநாட்டு தென் குடும்பர் ராஜராஜ சோழன், தேவேந்திர குல சக்கரவர்த்தி என்று தங்களின் சாதியோடு ராஜராஜ சோழனை இணைத்து போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இதெல்லாம் சாம்பிள்தான். 11 மணிக்கு மேல் ஒவ்வொரு அமைப்பினரும் கார்கள், பைக்குகளில் ஆர்ப்பாட்டமாக ஊர்வலமாக வந்து ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

ராஜராஜ சோழன் என்பவர் சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார் என்று நாம் கல்வெட்டு வாயிலாக, அறிய முடிகிறது. உலகம் முழுவதும் அவரின் பெருமையை நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். தமிழ் மன்னன் ராஜராஜசோழனை எந்த சாதி வட்டத்துக்குள்ளும் அடக்க முடியாது. மிகச் சிறந்த ஆட்சி முறையை நடத்தி மாமன்னனாக விளங்கியதன் ஆட்சி முறையைப் பற்றி கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளன. அவர் எந்த இடத்திலும் சாதியைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

ராஜராஜ சோழன் எங்க சாதி'... ஆண்டுதோறும் அட்ராசிட்டி... எப்போ திருந்துவீங்க..?

மேலும் ராஜராஜ சோழன் அவரது காலத்தில், அனைத்து சமயத்திற்கும் நிதி உதவி செய்துள்ளார். புத்த மடலாயங்கள், வைணவ தளங்கள், சைவ தளங்களும், சமண துறவிகளுக்கும், பொருள், பொன் உதவி செய்துள்ளார் என்று வராலாற்று ஆய்வுவகள் குறிப்பிடுகின்றன. தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் பரவ செய்த ராஜராஜனைக் கொண்டாடுவதற்கு பல சிறந்த காரணங்கள் இருக்கின்றன. ஆனால், சாதி ரீதியிலான வட்டத்துக்குள் இவரை அடைத்து சிறுமைப்படுத்தும் செயலைப் பலரும் செய்கின்றனர்.

சோழர்கள்  என்பது ஒரு அரசின் பெயர், அதை ஒரு சாதிய வட்டத்துக்குள் திணிப்பது சரி இல்லை. இந்தியாவில், எப்படி வாழும் அனைவரும் 'இந்தியர்கள்' என்று நாம் குறிப்பிடுகிறமோ? அப்படிதான், சோழ நாட்டில் இருப்பவர்கள் சோழர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். ஒரு நாட்டை வளமையாகவும், வலிமையாகவும் உருவாக்க அனைத்து தரப்பினர்களின் உதவியும் தேவைப்படுகிறது. அதுபோல், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் உதவியுடன் தான் நாட்டை வளமைடைய வைத்தனர்.

அதற்காக அனைவரும், ராஜராஜ சோழன் எங்கள் சாதி எனக் குறிப்பிடுவது சரி இல்லை. முக்கியமாக, 'சோழர்' என்பது சாதியின் பெயர் கிடையாது. அது ஒரு அரசின் பெயர் மற்றும் முற்காலத்தில் அதாவது சங்காலத்தில் அது ஒரு இனக்குழுவின் பெயர் ஆகும். மேலும், பல்வேறு கல்வெட்டுகளில் இவரைக் குறித்து வருகின்றன.

ராஜராஜ சோழன் எங்க சாதி'... ஆண்டுதோறும் அட்ராசிட்டி... எப்போ திருந்துவீங்க..?

ஆனால், கல்வெட்டில் அவர் எந்த 'குலம்' என்றும் எந்த 'சாதி' என்றும் குறிப்பிட்டது இல்லை. "ராஜராஜ சோழன்" என்று வரும் அவர் பெயருக்கு முன்னாள் வரும் உடையார், தேவர் என்ற பட்டங்களை வைத்து இவரை குறிப்பிட்ட சாதிக்குள் கட்டமைப்பது மிகவும் தவறானது. வரலாற்றை மாற்றும் முயற்சி மற்றும் சாதி வட்டத்திற்கு மாமன்னன் ராஜராஜ சோழனை அடக்குவது என்பது சரியானதல்ல என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாகும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget