மேலும் அறிய

“பளிச்” பிரகாசமாகுமா அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் வாழ்க்கை: மக்கள் ஆதரவு தருவார்களா?

தற்போது மாறிவரும் காலத்தில் அகல் விளக்குகளை புறந்தள்ளி பீங்கான் மற்றும் மெழுகு ஆகியவற்றால் தயாரான விளக்குகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

தஞ்சாவூர்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தஞ்சையில் அகல் விளக்குகள் விற்பனை வெகு மும்முரமாக நடந்து வருகிறது. இதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தரப்பில் கூறுகையில், மக்கள் மண்ணால் தயாரிக்கப்படும் அகல் விளக்குகளை வாங்கி எங்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

கார்த்திகை மாதமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது கார்த்திகை தீபத் திருநாளாகும்.

“பளிச்” பிரகாசமாகுமா அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் வாழ்க்கை: மக்கள் ஆதரவு தருவார்களா?

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வகையில் தடுக்கிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கார்த்திகை தீபத்திருநாளில் வீடுகளின் வெளிப்புறங்கள், வீட்டின் முற்றத்திலும் அகல் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். நம் வீட்டிலுள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வைக் கார்த்திகை தீபத் திருநாள் கொடுக்கும். இந்த தீபத்தை களிமண்ணால் செய்த அகல் விளக்குகளில் ஏற்றி வழிபாடு நடத்து வருகின்றனர். ஆனால் தற்போது மாறிவரும் காலத்தில் அகல் விளக்குகளை புறந்தள்ளி பீங்கான் மற்றும் மெழுகு ஆகியவற்றால் தயாரான விளக்குகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இருப்பினும் மவுசு என்றால் மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளுக்குதான். தஞ்சாவூரிலும் மண் அகல் விளக்குகள் விற்பனை நடந்து வருகிறது.

“பளிச்” பிரகாசமாகுமா அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் வாழ்க்கை: மக்கள் ஆதரவு தருவார்களா?

தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரும்பிய திசை எல்லாம் அகல் விளக்குகள் காய வைக்கப்பட்டு இருக்கும். கால் வைத்து நடக்க முடியாத அளவிற்கு அந்த தெருவில் அனைத்து வீடுகளின் வாசலில் காய வைத்து இருப்பார்கள்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. அங்கொன்றும். இங்கொன்றுமாக அரிதாக ஒரு சிலர் அகல் விளக்கு தயாரித்து வந்தனர்.

அகல் விளக்கு தயாரிக்கும் மண் பாண்ட தொழிலாளர் சுப்ரமணியன் என்பவர் கூறியதாவது: பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். கார்த்திகை தீபத்திற்காக அகல்விளக்கு செய்து வருகிறோம். ஒரு ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அகல் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன 

“பளிச்” பிரகாசமாகுமா அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் வாழ்க்கை: மக்கள் ஆதரவு தருவார்களா?

வழக்கமாக பித்தளையில் விளக்கு ஏற்றினாலும் கார்த்திகை தீபத்திற்கு மண்  விளக்கேற்றுவார்கள். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மண் விளக்குகளில் நவீன முறையில் வர்ணம் பூசி செய்து வருகிறோம். இந்த பகுதியில் 100 குடும்பங்கள் மண்பாண்டத் தொழில் செய்து வந்தோம்.  எல்லோரும் தொழிலை விட்டு சென்றதால் தற்போது 5 குடும்பங்கள் மட்டும் செய்து வருகிறோம்.
.
பாரம்பரிய தொழில் அழிந்து விடக் கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு செய்து வருகிறோம். வருமானம் மிகவும் குறைந்து விட்டதால் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். மண் கிடைப்பது மிகுந்த சிரமமாக உள்ளது.  வைக்கோல் ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்கபட்டது இன்று 300 ரூபாய் விற்கப்படுகிறது. 1000 ரூபாய்க்கு விற்ற மட்டை 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறோம்.

மக்கள் விலை ஏற்றம்னு நினைக்காமல் அகல் விளக்கு வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும். எங்கள் வாழ்க்கை மக்கள் கையில் உள்ளது. அடுத்த தலைமுறைக்கு மண் அகல்விளக்கு செய்ய ஆளே இருக்காது என்ற நிலை உருவாகி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget