மேலும் அறிய

விடுமுறை விட்டாச்சு... சுவாமிமலை கோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை கோயிலுக்கு வரும் உள்நாட்டு பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர்: அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் சுவாமிமலை கோயிலுக்கு வரும் உள்நாட்டு பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முருகன் என்றாலே அழகும், அறிவும் சேர்ந்த உருவம் நம் கண் முன் வந்து நிற்கும். முருகப் பெருமானின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதர்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

தகப்பன் சுவாமி என்று அழைக்கப்படும் சுவாமிநாத சுவாமி

முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளன. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என்ற அறுபடை வீடுகளில் 4வது வீடு என்றால் அது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள சுவாமிமலைதான். வெளிநாட்டினரும் இக்கோயிலின் பெருமையை கேட்டும், அறிந்தும் தேடி வந்து பார்த்து செல்கின்றனர் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று. இக்கோயில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள சுவாமிமலைதான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழும் திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை தலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்று அழைக்கப்படுகிறார். அதனால்தான் இந்த ஊரின் பெயரும் சுவாமிமலை என்றே கூறப்படுகிறது.

ஓம் என்ற பிரணவ மந்திரதத்தின் பொருள்

விடுமுறை விட்டாச்சு... சுவாமிமலை கோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

படைப்புத் தொழில் செய்து வந்ததால் பிரம்மனுக்கு ஆணவம் ஏற்பட்டது.  இதையறிந்த முருகன் பிரம்மனிடம், ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?” என்று கேட்டார். ஆனால் பிரம்மனுக்கு பதில் தெரியாமல் திகைத்தார். இதனால் அவரைத் தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன். சிவபெருமானே நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்குப் பின்னர்தான், பிரம்மனை விடுதலை செய்தார். அப்போது சிவபெருமான் முருகனிடம், பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?” என்று கேட்க நன்றாகத் தெரியுமே என்று முருகன் கூற, அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?” என்றார் ஈசன்.

கம்பீரமான உருவத்துடன் சுவாமி நாத சுவாமி

“உரிய முறையில் கேட்டால் சொல்வேன்” என்று பதில் கூறினார் முருகன். அதன்படி சிவபெருமான் இத்தலத்தில், முருகனுக்கு சீடனாக தரையில் பவ்யமாக அமர்ந்தபடி, முருகனிடம் பிரணவத்திற்காக பொருளை உபதேசமாக பெற்றார். அன்று முதல் முருகன், ‘சுவாமிநாதன்’ என்றும், ‘பரமகுரு’ என்றும், ‘தகப்பன் சுவாமி’ என்றும் போற்றப்பட்டார். இக்கோவிலில் சுவாமிநாதன் கம்பீரமாக, நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். இதில் இன்னொரு விஷயமும் இருக்கு.

கருங்கற்களை கொண்டு கட்டப்பட்ட மாடக்கோவில்

சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோவில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும். சுவாமிமலையில் மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும், முதற் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமியை சுற்றியும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலின் மேலே செல்ல அறுபது படிகள் ஏற வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. இப்படி ஏகப்பட்ட பெருமைகளை கொண்ட சுவாமிமலையை பற்றி அறிந்து கொண்டு பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்கின்றனர் என்பதும் மிக முக்கியமான ஒன்று. சமீபத்தில் ஜப்பானில் இருந்து ஒரு குழுவினர் தமிழ் மொழியின் மீது அதீத பற்றும், முருகன் மீது பக்தியும் கொண்டு தமிழகம் வந்து கோயில்களுக்கு சென்றனர்.

அவர்கள் சென்றதில் முக்கியமான ஒரு கோயில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலில், திருமண மண்டபங்களும், வசதியான தங்கும் விடுதிகளும் உள்ளன. இதனால்தான் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் சுவாமிமலைக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் சுவாமிமலைக்கு வருகை புரிவது அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அதிகளவில் வருகை தருகின்றனர். இதனால் கோயிலை சுற்றி கடை வைத்துள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

kuwait Fire Accident: குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Breaking News LIVE:  சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE: சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு!  அறிகுறிகளும் தீர்வும்!
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு! அறிகுறிகளும் தீர்வும்!
Bigg Boss Tamil 8 : கலைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டிறுகுள் நுழையும்  டிடிஎஃப் வாசன்
Bigg Boss Tamil 8 : கலைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டிறுகுள் நுழையும் டிடிஎஃப் வாசன்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi : உதய்-க்காக கனிமொழிக்கு பதவியா? கலைஞர் பாணியில் ஸ்டாலின்! பின்னணி என்ன?Amitshah Warning to Tamilisai : மேடையிலேயே  தமிழிசையை கண்டித்த அமித்ஷா? பாஜக உட்கட்சி பூசல்Annamalai Vs Tamilisai : ”தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக போட்ட ORDER! பதறிய அ.மலை, தமிழிசைAnnamalai Minister post  : அண்ணாமலைக்கு NO... அமைச்சர் ஆகாதது ஏன்? பாஜகவின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
kuwait Fire Accident: குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Breaking News LIVE:  சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE: சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு!  அறிகுறிகளும் தீர்வும்!
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு! அறிகுறிகளும் தீர்வும்!
Bigg Boss Tamil 8 : கலைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டிறுகுள் நுழையும்  டிடிஎஃப் வாசன்
Bigg Boss Tamil 8 : கலைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டிறுகுள் நுழையும் டிடிஎஃப் வாசன்
Noor Malabika Das: பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை... அழுகிய நிலையில் உடல் மீட்பு
Noor Malabika Das: பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை... அழுகிய நிலையில் உடல் மீட்பு
CM Stalin: என்ன லாபம் என்கிறார்கள்?  2026 தேர்தலில் 200+ தொகுதிகள் டார்கெட் - முதலமைச்சர் ஸ்டாலின்
என்ன லாபம் என்கிறார்கள்? 2026 தேர்தலில் 200+ தொகுதிகள் டார்கெட் - முதலமைச்சர் ஸ்டாலின்
Rahul Gandhi In Kerala :
"நான் சின்ன பையனா இருக்கும்போது" கேரளாவில் குட்டி கதை சொன்ன ராகுல் காந்தி!
Salem Accident: சேலம் அருகே கோர விபத்து: 3 வயது குழந்தை உட்பட 4  பேர் உயிரிழந்த சோகம்
சேலம் அருகே கோர விபத்து: 3 வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்
Embed widget