மேலும் அறிய

தஞ்சையில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அறிவிப்பு வெளியீடு

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினையும் மற்றும் அபராதத்தையும் தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

தஞ்சாவூர்: ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள் விற்பது, உபயோகிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீர் பைகள் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் பினாஸ்டிக் கொடிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பைனை செய்யும் வணிக நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

முதன்முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம், துணிக்கடைகளில் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000மும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

எனவே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினையும் மற்றும் அபராதத்தையும் தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பொது மக்களுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வலியுறுத்தி உள்ளார்.

நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகள்:

பாலிதீன் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பைகளைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.

மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது. கடலில் எறியப்படும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும் பாதிக்கின்றன.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Embed widget