மேலும் அறிய

தஞ்சை அருகே அயோத்திப்பட்டியில் 4755 கிலோ கஞ்சா அழிப்பு

வட மாநிலம் மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கடத்த முற்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டி தனியார் தொழிற்சாலையில் 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4 ஆயிரத்து 755 கிலோ கஞ்சாவை, அந்தந்த மாவட்ட போலீசார் மூட்டைகளாக கட்டி அழித்தனர்.

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ”தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதை நினைக்கும்போது, எனக்கு கவலையும், வருத்தமும் அதிகமாகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

போதைப் பொருட்களின் பயன்பாட்டை வேரோடும், வேரடி மண்ணோடும் களை எடுக்க அரசு மட்டுமல்ல, போலீஸ் மட்டுமல்ல, மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆந்திரா, ஒடிசா மற்றும் வடமாநிலங்களில் இருந்து, தமிழ்நாட்டுக்குள் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இப்படி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13 ஆயிரம் கிலோ கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் 5 மண்டலங்களில் நடைபெற்றது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள அயோத்திப்பட்டியில் தனியார் தொழிற்சாலையில் கஞ்சா அழிக்கும் பணி நடந்தது. திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், கரூர், அரியலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4 ஆயிரத்து 755 கிலோ கஞ்சாவை, அந்தந்த மாவட்ட போலீசார் ராட்சத இயந்திரகளில் போட்டு அழித்தனர்.

இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயசந்திரன், திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், திருச்சி துணை கமிஷனர் அன்பு மற்றும் மாவட்ட ஏ.டி.எஸ்.பி.க்கள், போலீஸார் கலந்து கொண்டனர்.

தஞ்சை அருகே அயோத்திப்பட்டியில்  4755 கிலோ கஞ்சா அழிப்பு

பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி., கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வரின் உத்தரவுப்படி போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது மத்திய மண்டலத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களை அளிக்கும் நிகழ்ச்சி அயோத்திபட்டியில் நடந்தது. 267 வழக்குகள் மூலம் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களை அழித்துள்ளோம்.

வட மாநிலம் மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கடத்த முற்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. கூடுதலாக சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கெள்ளப்படும். சோதனை சாவடிகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget