மேலும் அறிய

தஞ்சாவூர் : வெப்பம் சாரா உணவு பதன் செய்தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் தொடக்கம்..

கோல்டு, பிளாஸ்மா, அல்ட்ராசவுண்ட், ஹைபிரஷர் பிராசசிங், பல்சுடு லைட் எலக்டிரிக் பீல்டு, கதிரியக்க தொழில் நுட்பம் மற்றும் ஒசோன் தொழில் நுட்பம் அடங்கிய ஆராய்ச்சி வசதிகள் நிறுவப்பட்டுள்ளது.

ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன் செய்தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் தொடக்கம் - காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில் நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம்,  இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும்.உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் மேற்கொள்வதற்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறது.

தஞ்சாவூர் : வெப்பம் சாரா உணவு பதன் செய்தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் தொடக்கம்..

அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறைகளில் உலகளாவியதரத்தை பூர்த்தி செய்ய, இந்நிறுவனம் அதன் வளாகத்தில் வெப்பம் சாரா உணவு பதன் செய்தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளது, இது ஆசியாவின் முதல் மேம்பட்ட ஆராய்ச்சி வசதியாகும். இந்தமையத்தில்உலகத்தரஆராய்ச்சிவசதிகளான கோல்டு, பிளாஸ்மா, அல்ட்ராசவுண்ட், ஹைபிரஷர் பிராசசிங், பல்சுடு லைட் எலக்டிரிக் பீல்டு, கதிரியக்க தொழில் நுட்பம் மற்றும் ஒசோன்  தொழில் நுட்பம் அடங்கிய ஆராய்ச்சி வசதிகள் நிறுவப்பட்டுள்ளது.  

தஞ்சாவூர் : வெப்பம் சாரா உணவு பதன் செய்தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் தொடக்கம்..

உணவு பொருட்களின் தரம் மற்றும் ஆயுட் காலத்தை வெப்பம் சாரா தொழில் நுட்பத்தின் மூலம் அதிகரிப்பதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். கூடுதலாக, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஆதரவுடன், இந்த சிறப்பு மையத்தில் உணவு கதிர் வீச்சு அலகும் அமைக்கப்படும். மேலும்,வெப்பம் சாரா தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகளை இந்தமையம்அளிக்கும்.

மகளிர் சுய உதவிக்குழுவிற்கு திட்டம் குறித்த மகளிர் தின சிறப்பு விழிப்புணர்வு பயிற்சியை உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் ஸ்ரீபிரஹலாத்சிங்படேல் கானொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் அமைச்சர் பசுபதிகுமார்பராஸ், தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில் நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்,  ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன்செய் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தும்  புதிதாக கட்டப்பட்ட நிறுவனத்தின் நுழைவு வளைவையும் கானொளி காட்சி மூலம் திறந்து வைத்து,.பேசுகையில்,இது போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகளை தமிழ்நாட்டில் திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த மையம் மேம்பட்ட உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி சார்ந்த மேம்பாட்டை ஊக்குவிக்கும், மேலும் தொழில் நிறுவனங்களுடன் கூட்டு ஆராய்ச்சி பணிகளுக்கும் வணிகமயமாக்கலுக்கும் வழிவகுக்கும்.

தஞ்சாவூர் : வெப்பம் சாரா உணவு பதன் செய்தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் தொடக்கம்..

ரூ. 10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள இம்மையம் மேம்பட்ட உணவு பதப்படுத்தும் அணுகு முறைகள் பயிற்சியையும் அளிக்கும் என்றார். இந்தபயிற்சியில்,திட்டவழிகாட்டுதல்கள், மானிய-உதவி ஏற்பாடுகள், எப்எஸ்எஸ்ஏஐ விதிமுறைகள், பேக்கேஜிங் தொழில் நுட்பம், மதிப்புகூட்டல் தொழில் நுட்பங்கள் ஆகியவை விளக்கப்பட்டன.

தஞ்சாவூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 250 பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். உணவுபதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் செயலர்  அனிதாபிரவீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக, இந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சி.ஆனந்தராமகிருஷ்ணன் வரவேற்றார். உணவுபதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் இணை செயலர் மின்ஹாஜ்ஆலம் நன்றி கூறினார்.இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,ஆசியாவிலேயே முதன்முறையாக வெப்பம் இல்லாமல் உணவுகள், குளிர்பானங்களை பதப்படுத்தும் முறையை கொண்டு வரப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் : வெப்பம் சாரா உணவு பதன் செய்தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் தொடக்கம்..

உணவு பொருட்களை வெப்பத்தின் மூலமாக தான் பதப்படுத்துவார்கள். அப்போது நுண்ணுயிர்கள் அழியும். முக்கியமாக பழச்சாறுகள், நீரா பானம் அனைத்தையும் செய்வார்கள்.  இதில் வெப்பத்தால் பதப்படுத்தும் போது, நீயூட்டிரியேசன் வீணாகி விடும்.  அதனால் வெப்பம் முறை இல்லாமல், பிரஷர் மூலம் செய்யலாம். நீரா பானம் வெட்டிய பிறகு மூன்று மணி நேரம் வரை அப்படியே இருக்கும். அதன் பிறகு அதன் தன்மை மாறி விடும். அதனை பிரஷர் மூலம் பதப்படுத்தினால்,  7 நாட்கள் வரை அப்படியே இருக்கும். நீரா பானம் மட்டுமில்லாமல், பழச்சாறுகள், மீன், இறைச்சி போன்றவைகளை இது போன்று செய்து வைக்கலாம். இது போன்ற பிரஷர் மூலம் பதப்படுத்துவதால், நீயூட்ரியேசன் அழியாமல் இருக்கும்.இந்த பிரஷர் 600 பார் என்பது, மிகப்பெரிய அழுத்தமாகும். 100 மாருதி காரை ஒன்றாகு அழுத்தி ஸ்டாப் அளவில் கொண்டு வருவதற்கு என்ன அழுத்தம் தேவையோ அந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.  

தஞ்சாவூர் : வெப்பம் சாரா உணவு பதன் செய்தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் தொடக்கம்..

ஆசியாவிலேயே தண்ணீர் மூலம் ஹைட்ராலிக் பிரஷர் இயந்திரம் முதன் முதலாக கொண்டு வரப்பட்டுள்ளது. பால் போன்ற உணவு பொருட்களை வெப்பமாக்காமல் இருந்தால் கெட்டு போய் விடும். அந்த உணவு பொருளை வெப்பமாக்குவதற்கு பதிலான மாற்று முறையே பிரஷர் மூலம் பதப்படுத்துவதாகும். இக்கட்டிடத்தின் மதிப்பு ரூ. 5 கோடியிலும், இயந்திரத்திற்கான பொருட்கள் ரூ. 5 கோடி என மொத்தம் சுமார் ரூ. 10 கோடியாகும்.தற்போது ரேடியேசன் பிளாண்ட் கொண்டு வரவுள்ளோம். இதற்கு பாபா அட்டாமிக் மையத்தினர் உறுதுணையாக உள்ளார்கள் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Embed widget