மேலும் அறிய

தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் இன்று பதவியேற்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

தஞ்சாவூர்: தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக மகேந்திரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மகேந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆசி பெற்றார். இன்று தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மகேந்திரன் பதவி ஏற்றார்.

அவரிடம் முன்னாள் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் பொறுப்புகளை ஒப்படைத்தார். பின்னர் பி.ஜி.ராஜேந்திரன் புதிய மாவட்ட தலைவர் மகேந்திரனை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. தற்போது அனைத்து மதம், இன மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்து புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து உள்ளது.

1925-ம் ஆண்டு தஞ்சையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அது 100 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிறேவேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தான். அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து உள்ளனர்.

தஞ்சை மாநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மற்ற பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முடித்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு புதிய மாவட்ட தலைவர் மகேந்திரன் செயல்பட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜேம்ஸ் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் மகேந்திரன் ஏற்புரையாற்றிப் பேசினார். வரலாற்று சிறப்பு மிக்க காங்கிரஸ் கட்சியில் அடிப்படை தொண்டனாக பணியாற்றிய என்னை தலைவராக நியமித்த சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் ஆலோசனைப்படி கட்சியை வளர்க்க பாடுபடுவேன்.

காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள், பெண்கள் சேர்த்து கட்சி வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவேன்.  தஞ்சை மேலவீதி பகுதியில் உள்ள தியாகிகள் இல்லம் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களை காங்கிரஸ் தலைமையின் ஆலோசனைப்படி மீட்டெடுக்க முயற்சிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget