மேலும் அறிய

கோடைக்காலத்தை விட மோசமாக சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் தஞ்சை மக்கள்

ஆடி மாதத்திலும் கோடைகாலம் போல் கொளுத்தி எடுக்கும் வெயிலால் மக்கள் வெகுவாக அவதியடைந்து வருகின்றனர். தஞ்சையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.

தஞ்சாவூர்: ஆடி மாதத்திலும் கோடைகாலம் போல் கொளுத்தி எடுக்கும் வெயிலால் மக்கள் வெகுவாக அவதியடைந்து வருகின்றனர். தஞ்சையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை தான் வெயிலின் தாக்கம் இருப்பது வழக்கம். ஆனால் தற்போது கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தஞ்சை பகுதியில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தஞ்சை மாவட்டத்தில் கோடைகாலத்தின் தொடக்க முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர காலமான மே 4ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.

இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அவ்வப்போது மழையும் பெய்தது. அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் குறையவே இல்லை. அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் கொளுத்தியதை போன்று வெயில் வாட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் வெயில் தாக்கம் குறைவாக இருந்தாலும் காற்று வீசி வருகிறது. காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவில் காற்று வீசுகிறது. ஆனால் பகல் நேரங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளதால் பகலில் அனல்காற்று வீசுகிறது.

கோடைக்காலத்தை விட மோசமாக சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் தஞ்சை மக்கள்

நேற்றும் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இன்று காலை முதல் வெயில் அதிகமாக உள்ளது. இந்த வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வெளியே செல்பவர்கள், நடந்து செல்பவர்களும் அனல் காற்றினால் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் பொதுமக்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு செல்லும் அளவிற்கு வெயில் தாக்கம் அதிகம் உள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது. வெயில் தாக்கம் காரணமாக சாலையோரங்களில் விற்பனை செய்யப்பட்ட இளநீர், கரும்புசாறு, மோர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் மற்றும் பழச்சாறு, குளிர்பானங்களை மக்கள் அதிக அளவில் வாங்கி பருகினர். இதனால் அந்த கடைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது

நேற்று விடுமுறை என்பதால் பெரிய கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கோயிலுக்கு வந்தவர்களும் வெயிலின் தாக்கம் காரணமாக தலையை துணியால் மூடியபடி சென்றனர். கோடைகாலத்தை விட தற்போது இளநீர், குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget