மேலும் அறிய
Advertisement
Thanjavur: 'ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி.. இப்பவாது பேய்வாரி வாய்க்காலை தூர்வாருங்க..' தஞ்சை விவசாயிகள் கோரிக்கை..!
Thanjavur: பேய்வாரி வாய்க்காலை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக ஓடும் பேய்வாரி வாய்க்கால் செடி, கொடிகள் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. தற்போது மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேய்வாரி வாய்க்கால்:
தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக பேய்வாரி வாய்க்கால் ஓடுகிறது. இதை சுற்றி ஏராளமாக கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பேய்வாரி வாய்க்கால் சக்கரசாமந்தம், களிமேடு வழியாக செல்கிறது. இந்த பேய்வாரி வாய்க்காலில் கடந்த ஆண்டு தூர் வாரப்பட்டது. இருப்பினும் முறையாக முழுமையாக தூர்வாரப்படவில்லை. இதனால் தற்போது செடி, கொடிகள் மண்டி வாய்க்காலா? அல்லது காடா? என்று தெரியாத அளவிற்கு மாறி உள்ளது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள்:
இந்த பேய்வாரி வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி, சக்கரசாமந்தம், களிமேடு உட்பல பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் உள்வாங்கும் இந்த பேய்வாரி வாய்க்காலின் தற்போதைய நிலையில் சிறிய மழைக்கு கூட தாங்காது என்பது போல் உள்ளது.
இதனால் தண்ணீர் ஓட வழியின்றி உள்ளது. மேலும் இந்த பேய்வாரி வாய்க்காலில் குப்பைகளும் கொட்டப்படுவதால் தூர்ந்து போய் காணப்படுகிறது. இந்த கோடைக்காலத்திலேயே இந்த பேய்வாரி வாய்க்காலை குறுவாடிப்பட்டி தலைப்பில் இருந்து வண்ணாரப்பேட்டை, ராமநாதபுரம் வழியாக முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தினால் விவசாயிகள் சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி வர ஏதுவாக இருக்கும்.

தூர்வார வேண்டும்:
இல்லாவிடில் மழை பொழிவு அதிகம் இருந்தால் வாய்க்காலில் தண்ணீர் ஓட முடியாமல் வயல்களில் தேங்கி சேதத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பேய்வாரி வாய்க்காலை முழுமையாக தூர் வாரி தண்ணீர் தடையின்றி ஓட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தையே விவசாயிகள் நம்பி உள்ளனர். வாய்க்கால்கள், ஆறுகள், வாரிகள் இவற்றின் வழியே வரும் தண்ணீர் கொண்டுதான் முப்போகமும் சாகுபடி நடந்து வருகிறது. கடந்தாண்டு அவசர அவசரமாக வாய்க்கால்கள், ஆறுகள், வாரிகளில் தூர்வாரும் பணிகள் நடந்தது. காரணம் மே மாதத்திலேயே மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதுதான்.
இதனால் முழுமையாக தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் குறுவை சாகுபடியை கடைமடை பகுதி விவசாயிகள் தாமதமாக தொடக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இப்போதே தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion