மேலும் அறிய

தஞ்சாவூரில் குழந்தை உயிரை காப்பாற்ற 16 கோடிக்கு மருந்து - இதுவரை 7 கோடி மட்டுமே வசூல்

’’செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள்ளாக இந்நிதியைத் திரட்ட வேண்டி பெற்றோர்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் முயற்சி’’

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ். காலனி அருகேயுள்ள சிராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த ரெப்கோ வங்கியில் பணிபுரியும் ஜெகதீஷ்-எழிலரசி தம்பதியரின் 22 மாத குழந்தை பாரதி முதுகுத்தண்டுவட தசைநார்ச் சிதைவு என்கிற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இதனால் பாரதியின் உடல் உறுப்புகள் செயல்பாடு ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நோயிலிருந்து பாரதி குணமடைய இரண்டு வயதுக்குள்ளாக ஜோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஊசி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். இதன் விலை 16 கோடி. இந்த குழந்தையைக் உயிருடன் காப்பாற்ற வரும்  செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள்ளாக இந்நிதியைத் திரட்ட வேண்டி அவர்களது பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகளை நண்பர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.

தஞ்சாவூரில் குழந்தை உயிரை காப்பாற்ற 16 கோடிக்கு மருந்து - இதுவரை 7 கோடி மட்டுமே வசூல்

இந்நிலையில் பாரதிக்கு உதவுகிற வகையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்,  மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நிதி திரட்டும் பணியை செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கி வைத்தார். மேலும் தஞ்சாவூர் நகரம் முழுவதும் குழந்தை பாரதிக்காக பல்வேறு இடங்களில் நிதி சேகரிக்கும் பணியை ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் காளையார் சரவணன் தலைமையில் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். இதுவரை 7 கோடி மட்டுமே சேர்ந்துள்ளது. குறைந்த காலத்தில் மேலும் அதிக நிதி தேவைப்படுவதால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் தஞ்சாவூர் பனகல் கட்டடம் எதிரில்  மனித சங்கிலி நிகழ்ச்சியை நடத்தி நிதி உதவி கோரினர்.

தஞ்சாவூரில் குழந்தை உயிரை காப்பாற்ற 16 கோடிக்கு மருந்து - இதுவரை 7 கோடி மட்டுமே வசூல்

 இதே போல் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் அன்பு சுவர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பாரதிகாக நிதி திரட்டினர்.  ஊசி செலுத்துவதற்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டமின்று , தமிழகம் முழுவதும், பல்வேறு தன்னார்வ அமைப்புகள், பெண் குழந்தை பாரதிக்காக நிதியை திரட்டி வருகின்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலீவர் கூறுகையில், பாரதிக்கு தேவையான நிதி பெறுவதற்காக பல்வேறு அமைப்புகள் போர்கால அடிப்படையில் நிதியை திரட்டி வருகின்றனர். நிதி திரட்ட முடிவு செய்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் வங்கியில் கணக்கு திறந்துள்ளோம். அக்குடும்பம் நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களால் அவ்வளவு நிதி திரட்ட முடியாது. அதற்காக தான் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி வருகின்றோம். பெண் குழந்தை பாரதி  உயிருடன் நலமுடன் வாழவேண்டும் என்றார்.

தஞ்சாவூரில் குழந்தை உயிரை காப்பாற்ற 16 கோடிக்கு மருந்து - இதுவரை 7 கோடி மட்டுமே வசூல்

இது குறித்து தந்தை ஜெகதீஸ்  கூறுகையில், இயற்கையாக புரோட்டீன் சத்து குறைபாடு காரணமாக நோய் ஏற்பட்டது. இதற்கான ஊசி மருந்தின் விலை 16 கோடி, அதை இறக்குமதி வரி 6 கோடி என 22 கோடி செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை எங்களால் திரட்ட முடியாது. தற்போது நண்பர்கள், உறவினர்கள் உதவியால் வெறும் 7 கோடி  தான் கிடைத்துள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் ஊசி போடவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எங்களது குழந்தை காப்பாற்ற வேண்டும் என நம்பிக்கையில் இருந்து வருகின்றோம்.  தமிழக அரசு, மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் அனைவரும் எங்கள் குழந்தையை காப்பாற்ற உதவிகள் செய்து தரவேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Embed widget