மேலும் அறிய

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி! இதுவரை ரூ .1.14 கோடி பறிமுதல்

தஞ்சாவூரில் அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், கட்சி கொடிகள் மற்றும் கட்சி சின்னங்களை குறிக்கும் அனைத்து அடையாளங்களும் அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

தஞ்சாவூர்: சட்டமன்ற தேர்தலை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.1,14,74,127 தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தஞ்சாவூரில் அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், கட்சி கொடிகள் மற்றும் கட்சி சின்னங்களை குறிக்கும் அனைத்து அடையாளங்களும் அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பரிசு, பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் மற்றும் பொருட்கள் கொண்டு சென்றால் அதற்குரிய உரிய ஆவணங்கள் இல்லாத போது அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தஞ்சை, திருவையாறு, பாபநாசம், பட்டுக்கோட்டை, போராவூரணி, கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 72 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் பணம், வாக்களார்களுக்கு பரிசு பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துணை ராணுவ படையினருடன் போலீசார் இணைந்து வீடியோ கேமாரவுடன் முக்கிய சாலைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

24 மணி நேரமும் பறக்கும் படை அதிகாரிகள் இந்த வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரூ.1,14,74,127 பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சையில் 39,86,026  திருவையாறு ரூ.6,73,256 பாபநாசம் ரூ.10,63,400 பட்டுக்கோட்டை ரூ.9,36,475 போராவூரணி ரூ.3,65,000, கும்பகோணம் ரூ.8,60,170, திருவிடைமருதூர் ரூ.19,00,000 ஒரத்தநாடு ரூ.16,89,800 என மொத்தமாக ரூ.52,70,161 பறிமுதல் செய்யப்பட்டு அந்நதந்த தாசிதாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவை அனைத்தும் கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் தஞ்சை மாவட்டத்தில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட சில்வர் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை காண்பித்து பணம் மற்றும் பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget